- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும். தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம்,வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை, மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் இந்த காளான் ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே!
1 கப் அரிசி இருந்தால் போதும். வித்தியாசமான இந்த ஊத்தப்பம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்! எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். உங்க வீட்டிலிருக்கும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்க்குமே இந்த காளான் ஊத்தாப்பம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். சாதாரண தோசையை விட இது போல காளான் சேர்த்து ஊத்தாப்பம் செய்து கொடுத்தால் வயிறு நிரம்பும், ஆரோக்கியமும் கூட. உங்கள் நாளை ஒரு சத்தான உணவுடன் தொடங்க விரும்பினால் நிறைய காளான் மற்றும் குறைந்த எண்ணெயுடன் மொறுமொறுப்பான ஊத்தப்பம் செய்து கொடுங்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான கடாய் காளான், காலையில் டிபனில் இருந்து நைட் டின்னர் வரைக்கும் சைட் டிஷ்க்கு வேற எதுவுமே வேண்டாம்!
Ingredients
Method
முதலில் பாசி பருப்பை நன்கு கழுவி தண்ணீரில் ஒரு மணிநேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை வதங்கினதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, காளான் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மாசல் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். காளான் வெந்ததும் மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு பவுளில் தோசை மாவுடன் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து வைத்து சூடானதும் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் காளான் மசாலாவை தூவி மூடி வைக்கவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து தோசை வெந்ததும், திருப்பி போட்டு கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி எடுத்தால் காளான் ஊத்தாப்பம் தயார்.
இந்த ஊத்தப்பத்தில் காரம் உள்ளதால் தனியாக சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.






