Advertisement
ஜூஸ்

முலாம்பழ சர்பத் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

Advertisement

முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல சர்பத் செய்யலாம். பொதுவா வேணுமே இந்த முலாம் பழத்தை அப்படியே சாப்பிட்டாலும் இல்ல ஜூஸா போட்டு குடிச்சாலும் அதன் மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த வெயில் காலத்துல அதிக உடல் சூட்டால தவிக்கிறவங்களுக்கு இந்த முலாம்பழ சர்பத் ரொம்பவே உதவியா இருக்கும்.

இந்த முலாம் பழத்துல நீங்க சர்பத் போட்டு குடிக்கும்போது உங்களுக்கு தொண்டைக்கு இதமா வயிறு வரைக்கும் சில்லுனு இருக்கும். ஜவ்வரிசி சியா விதைகள் முந்திரி, பாதாம் எல்லாம் சேர்க்கிறதால ரொம்பவே ஒரு ரிச்சான டேஸ்ட்ல குடிக்கிறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்.

Advertisement

முலாம் பழத்தில் இதுவரைக்கும் நீங்க ஜூஸ் கூட போட்டு குடிச்சது இல்ல அப்படின்னா வெறும் பால் சர்க்கரை முலாம்பழம் இதெல்லாம் செய்து ஜூஸ் மாதிரி அடிச்சு குடுங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்.

அதே மாதிரி இந்த சூப்பரான சர்பத்தும் ஒரு நாள் குடிச்சு பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். கடைகள்ல கிடைக்கிற அதே மாதிரியான டேஸ்ட்டுல வீட்டிலேயே நம்ம பழங்கள் வச்சு சூப்பரா இந்த மாதிரியான சர்பத் போட்டு குடிச்சுக்கலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான ரிச்சான ஆரோக்கியமான முலாம்பழ சர்பத் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

முலாம்பழ சர்பத் | Muskmelon sarbath recipe in Tamil

Print Recipe
முலாம் பழத்துல நீங்க சர்பத் போட்டு குடிக்கும்போது உங்களுக்கு தொண்டைக்கு இதமா வயிறு வரைக்கும்
Advertisement
சில்லுனுஇருக்கும். ஜவ்வரிசி சியா விதைகள் முந்திரி, பாதாம் எல்லாம் சேர்க்கிறதால ரொம்பவே ஒருரிச்சான டேஸ்ட்ல குடிக்கிறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். முலாம் பழத்தில் இதுவரைக்கும் நீங்க ஜூஸ் கூட போட்டு குடிச்சது இல்ல அப்படின்னா வெறும் பால் சர்க்கரைமுலாம்பழம் இதெல்லாம் செய்து ஜூஸ் மாதிரி அடிச்சு குடுங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்.
Course Drinks, juice
Cuisine tamil nadu
Keyword Muskmelon sarbath
Advertisement
Prep Time 10 minutes
Servings 4
Calories 309

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் முலாம்பழம்
  • 1 கப் பால்
  • 1 டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
  • 5 முந்திரி
  • 5 பாதாம்
  • 5 பிஸ்தா
  • 1 டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசி
  • 1 டீஸ்பூன் சியா விதைகள்
  • 1/4 கப் சர்க்கரை

Instructions

  • முதலில் ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து அதனை வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • முலாம் பழத்தை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். சியா விதைகளை 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அதனுடன் கஸ்டட் பவுடர் கலந்து அதனை நன்றாக கொதிக்க வைக்கவும் கொதித்ததும்சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கலந்து விட்டு கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்
  • இப்பொழுது அதனுடன் அரைத்த முலாம்பழம் விழுது பொடித்த பாதாம் முந்திரி பிஸ்தா வேக வைத்த ஜவ்வரிசி ஊற வைத்த சியா விதைகள் அனைத்தையும் சேர்த்து கொள்ளவும்.
  •  
    இப்பொழுது இரண்டு மணி நேரம் அதனை பிரிட்ஜுக்குள் வைத்து குளு குளுவென எடுத்து குடித்தால் சுவையான முலாம்பழம் சர்பத் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 309kcal | Carbohydrates: 201g | Protein: 19g | Sodium: 11.7mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

10 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

16 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago