அட்டகாசமான மட்டன் பால்ஸ் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் மட்டன் பால்ஸ். பொதுவாக மட்டன் உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கு

By Prem Kumar · 14/7/2024

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் மட்டன் பால்ஸ். பொதுவாக மட்டன் உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த மட்டன் பால்ஸ். இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக மட்டன் பிடிக்காதவர்கள் இதனை சுவைத்தால், இதற்கு அடிமையாகி விடுவார்கள்.

Meat balls என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மட்டன் பால்ஸ் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இவை மாமிசம் சேர்க்காமலும் செய்யப்படுகிறது. மட்டன் பால்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான மட்டன் பால்ஸ்களை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் அசைவ பிரியர்கள். அந்தவகையில், இந்த முறை மட்டனை வைத்து ருசியான மற்றும் மிருதுவான மட்டன் பால்ஸ் எப்படி செய்வதென்று இந்த பதிவில்‌ காணலாம்.

இதனையும் படியுங்கள் : மண மணக்கும் மட்டன் சில்லி சுக்கா ஒருமுறை இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை அள்ளும்!!!

Recipes AMP · Quick view
View full