- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening
அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் மட்டன் பால்ஸ். பொதுவாக மட்டன் உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த மட்டன் பால்ஸ். இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக மட்டன் பிடிக்காதவர்கள் இதனை சுவைத்தால், இதற்கு அடிமையாகி விடுவார்கள்.
Meat balls என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மட்டன் பால்ஸ் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இவை மாமிசம் சேர்க்காமலும் செய்யப்படுகிறது. மட்டன் பால்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான மட்டன் பால்ஸ்களை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் அசைவ பிரியர்கள். அந்தவகையில், இந்த முறை மட்டனை வைத்து ருசியான மற்றும் மிருதுவான மட்டன் பால்ஸ் எப்படி செய்வதென்று இந்த பதிவில் காணலாம்.
இதனையும் படியுங்கள் : மண மணக்கும் மட்டன் சில்லி சுக்கா ஒருமுறை இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை அள்ளும்!!!
Ingredients
Method
முதலில் மட்டனை நன்கு கழுவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, தேங்காய், பட்டை, கிராம்பு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் பொட்டுக்கடலை மாவு, அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய் மசாலா, உப்பு சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
பின் இந்த மட்டன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சிறு சிறு உருண்டைகளாக முட்டையின் வெள்ளை கருவில் பிரட்டி, பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் பால்ஸ் தயார்.






