- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
நம்முடைய பாரம்பரிய உணவுகளில் மாமிச உணவு வகைகளும் ஒன்று. இந்த மாமிச உணவுகளில் ஆட்டுக்கறியில் செய்யப்படும் உணவுகள் மிகவும் பிரபலமானவைகளாக உள்ளன. அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. அதிலும் ஆட்டுக்கறியை விரும்பி சாப்பிடுவோர் அதிகம். அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.
மட்டன் கறி தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வெரட்டிகளை செய்யலாம். அதிலும் மட்டனை எண்ணெயில் சுண்ட வறுத்து தண்ணீர் சேர்க்காமல் செய்யப்படும் மட்டன் சுக்கா அசைவ பிரியவர்களின் ஃபேவரெட் டிஷ். வீட்டில் மட்டன் வாங்கினால் நாம் எப்போது பொதுவாக செய்வது மட்டன் குழம்பு, வறுவல், எப்போவாவது மட்டன் பிரியாணி தான். ஆனால் நாம் ஹோட்டல்களுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது என்னவோ ‘மட்டன் சுக்கா’ தான்.
எனவே மட்டன் சுக்கா சாப்பிட ஹோட்டல்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஏனென்றால் இனி உங்கள் வீட்டிலேயே எளிதாக சில மாற்றங்களுடன் எப்படி மட்டன் சில்லி சுக்கா செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, குஸ்கா, புலாவ், வெறும் சோறு என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம்.
இதனையும் படியுங்கள் : மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் தயிர், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, அரைத்த காய்ந்த மிளகாய் விழுது, மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் இதனுடன் கடுகு எண்ணெய் மற்றும் வேக வைத்த மட்டனை சேர்த்து குறைந்தது நான்கு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் ஊற வைத்த மட்டன் கலவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
மட்டன் நன்கு சுருண்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் சில்லி சுக்கா தயார்.






