- Advertisement -
பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும். ஆம், இன்று ஆட்டின் குடல் பகுதியை வைத்து தான் இன்று குழம்பு செய்து பார்க்க போகிறோம். இந்த ஆட்டு குடல் மிளகு வறுவலை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உங்கள் குடல் குழம்புக்கு அடிமையாகி விடுவார்கள். குடல் வறுவல் இட்லி, தோசை, பூரி என அனைத்து டிபன் வகைகளுக்கும் சுவையாக இருக்கும்.
-விளம்பரம்-
குடல் மிளகு வறுவல் | Mutton Boti Pepper Fry Recipe In Tamil
பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும். ஆம், இன்று ஆட்டின் குடல் பகுதியை வைத்து தான் இன்று குழம்பு செய்து பார்க்க போகிறோம். இந்த ஆட்டு குடல் மிளகு வறுவலை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உங்கள் குடல் குழம்புக்கு அடிமையாகி விடுவார்கள்.
Yield: 5 People
Calories: 104.5kcal
Equipment
- 1 குக்கர்
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 பெரய பவுள்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ ஆட்டு குடல்
- 25 சின்ன
- 2 தக்காளி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் கரம்
- 3 டீஸ்பூன் மிளகு தூள்
- உப்பு தேவையானஅளவு
தாளிக்க
- 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் ஆட்டுக்குடலை இருமுறை சுடு நீரில் நன்றாக கழுவி பின் குளிர் நீரில் கழுவி, கடைசியாக மஞ்சள் உப்பு சேர்த்து கழுவிக் கொள்ளவும்.
- குக்கரில் சுத்தம் செய்த குடல் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறுதீயில் 8 விசில் விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுதை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி,பின் வேக வைத்த குடல் சேர்த்து கொதிக்க விடவும்.
- இதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை மீடியம் தீயில் வைத்து வேக விடவும்.
- தண்ணீர் வற்றியதும் கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- நன்றாக மசாலா ஒட்டிபிடிக்கும் வரை அடிக்கடி கிளறி மூடி போட்டு வேக விடவும். கடைசியாக கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
- அவ்வளவுதான். சுவையான குடல் மிளகு வறுவல் ரெடி. இது சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Nutrition
Serving: 700g | Calories: 104.5kcal | Carbohydrates: 1.8g | Protein: 17.5g | Fat: 2.6g | Saturated Fat: 0.6g | Sodium: 84.4mg | Potassium: 380mg | Fiber: 1g | Vitamin C: 104.8mg | Calcium: 0.9mg | Iron: 3.6mg
- Advertisement -