அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது அசைவ உணவு தான். கோழிக்கறியில் எதை சமைத்துக் கொடுத்தாலும் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். இருப்பினும் கோழிக்கறியை விடமட்டன் உடலுக்கு மிகுந்த நன்மை தரும். கோழிக்கறி சமைப்பது போல சில்லி சிக்கன் விரும்பி சாப்பிடுவது போல், மட்டனில் ‘மட்டன் சில்லி ஃப்ரை’ செய்து கொடுத்துப்பாருங்க.. சிக்கன் வேண்டாம் , மட்டனே போதும் என்று வீட்டில் உள்ள அனைவரும் கூறுவார்கள். ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் அனைவரும் ஆர்டர் செய்வதும் இந்த சிக்கன் வகைகளை தான். கோழிக்கறியை சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதல்ல. எனவே மட்டன் சில்லி ஃப்ரை வீட்டிலேயும் சமைத்து விருப்பமாக சாப்பிடலாம். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் மட்டன் சில்லி ஃப்ரை எப்படி சுலபமாக வீட்டிலேயும் செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மட்டன் சில்லி ஃப்ரை | Mutton Chilly Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 250 கிராம் மட்டன் துண்டுகளாக
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 வெங்காயம்
- 7 பல் பூண்டு
- 3 கிராம்பு தூள் செய்தது
- 2 துண்டு மஞ்சள்
- சோம்பு கொஞ்சம்
- 1 துண்டு இஞ்சி
- 3 சிவப்பு மிளகாய்
- உப்பு தேவைக்கேற்ப
- 10 கிராம் புளி
செய்முறை
- மட்டனை துண்டாக்கி நன்கு சுத்தம் செய்யவும் மிளகாய், இஞ்சி, சோம்பு, பாதி வெங்காயம் மற்றும் மஞ்சள் முதலியவைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- எண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு, கிராம்புத் தூள் போட்டு வதக்கவும். வதங்கிய வெங்காயத்தில், மட்டன் துண்டுகள் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, குறைந்த தீயில், மூடி,சிறுது நேரம் வேகவைக்கவும்.
- வெந்நீர்,உப்பு சேர்த்து மட்டன் மிருதுவாகும் வரை வேக வைக்கவும். மட்டன் வெந்தவுடன், கூழாக கரைத்த புளியை விட்டு சில நிமிடம் வதக்கவும். சிறியதீயில் வைத்து நன்கு வறுபட்டவுடன் இறக்கி பரிமாறவும்.