பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். அசைவ உணவுப் பிரியர்கள் இந்த மட்டன் சாப்ஸ் மிகவும் விருப்பமான ஒரு ரெசிபி ஆகும். தமிழ்நாட்டின் பல மாவட்டம் சுவையான சமையல் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அதே போல் இந்த மட்டன் சாப்ஸ் ஒரு ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதிரி சமையல் செய்முறையில் இருக்கும்.
மட்டன் சாப்ஸ் எனப்படுவது எலும்பில் ஆட்டு இறைச்சியுடன் கொண்டு இருப்பதாகும்., இந்த மட்டன் சமையலுக்கு கடைகளில் மட்டன் வாங்கும் போதே மட்டன் சாப்ஸ் என்று கேட்டு வாங்க வேண்டும். மட்டன் சாப்ஸ் உணவை எலும்பில் ஆட்டு இறைச்சியைக் கொண்டு செய்வார்கள், சாப்ஸ் உண்மையில் மென்மையாகவும், எலும்புடன் சேர்ந்த மட்டன் சாறு இங்கு, சாப்பிடுவதற்கு தென் போன்று சுவையாக இருக்கும். வாங்க இந்த மட்டன் சாப்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மட்டன் சாப்ஸ் | Mutton Chops Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 250 கிராம் மட்டன் சாப்ஸ்
- 2 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
- 10 பூண்டு
- 1/4 அங்குல துண்டு இஞ்சி
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 தேக்கரண்டி உப்பு
- 1 தேக்கரண்டி சோம்பு தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 4 மேசைக்கரண்டி எண்ணெய்
செய்முறை
- மட்டன் வாங்கும் போது சாப்ஸ் மட்டன் என்று கேட்டு வாங்க வேண்டும். மட்டனுடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் போட்டு 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அதை வேக வைத்த மட்டன் துண்டுகளில் எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு தாவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா தடவிய மட்டன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து போடவும்.
- 3 நிமிடம் கழித்து திருப்பி விடவும், அதன் பிறகு 2 நிமிடம் கழித்து பொன்னிறமானதும் எடுத்து விடவும். ஈஸி மட்டன் சாப்ஸ் தயார்.