Advertisement
அசைவம்

ருசியான விருதுநகர் மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement

மட்டனை விதவிதமாக சமைத்து உட்கார்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் மட்டன் சுக்கா மதுரை ஸ்டைலில் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். மதியம் சுட சுட சாதம் ரசம், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் அட அட என்ன டேஸ்டா

இதையும் படியுங்கள் : அசத்தலான ருசியுடன் இருக்கும் மட்டன் சௌ சௌ தொக்கு, இப்படி செஞ்சுதான் பாருங்களேன்! இதன் சுவையே தனி தான்!

Advertisement

இருக்கும். எப்படி இந்த மாட்டான் சுக்கா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த வார இறுதில் செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

மட்டன் சுக்கா | Mutton Chukka Recipe In Tamil

Print Recipe
மட்டனை விதவிதமாக சமைத்து உட்கார்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் மட்டன் சுக்கா மதுரை ஸ்டைலில் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். மதியம் சுட சுட சாதம் ரசம், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் அட அட என்ன டேஸ்டா இருக்கும். எப்படி இந்த மாட்டான் சுக்கா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த வார இறுதில் செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mutton chukka, மட்டன் சுக்கா
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்
  • குக்கர்

Ingredients

அரைப்பதற்கு:

  • 2 ஸ்பூன் மல்லி
  • 2 ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் மிளகு
  • 2 ஏலக்காய்
  • 3 இலவங்கம்
  • 3 பட்டை
  • வர மிளகாய் காரத்திற்க்கேற்ப

வதக்குவதற்கு:

  • ½ கிலோ மட்டன்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • கொத்தமல்லி தலை கொஞ்சம் நறுக்கியது

Instructions

  • முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து அதில் ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி அத்துடன் மஞ்சள் தூள், வேகுவதற்கு கொஞ்சம் உப்பு சேர்த்து மூடி போட்டு 4 விசில் வேக விட்டு எடுக்கவும்.
  • அடித்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்சில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • மட்டன் வெந்ததும் ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த மட்டனை அந்த தண்ணீருடன் அப்படியே இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துகொள்ளவும். பிறகு அது தண்ணீர் சுருண்டும் வரை வேகவிடவும்.
  • மட்டனில் உள்ள தண்ணீர் சுண்டுனதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

3 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

3 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

4 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

7 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

7 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

9 மணி நேரங்கள் ago