- Advertisement -
மட்டனை விதவிதமாக சமைத்து உட்கார்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் மட்டன் சுக்கா மதுரை ஸ்டைலில் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். மதியம் சுட சுட சாதம் ரசம், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் அட அட என்ன டேஸ்டா
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : அசத்தலான ருசியுடன் இருக்கும் மட்டன் சௌ சௌ தொக்கு, இப்படி செஞ்சுதான் பாருங்களேன்! இதன் சுவையே தனி தான்!
- Advertisement -
இருக்கும். எப்படி இந்த மாட்டான் சுக்கா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த வார இறுதில் செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
மட்டன் சுக்கா | Mutton Chukka Recipe In Tamil
மட்டனை விதவிதமாக சமைத்து உட்கார்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் மட்டன் சுக்கா மதுரை ஸ்டைலில் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். மதியம் சுட சுட சாதம் ரசம், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் அட அட என்ன டேஸ்டா இருக்கும். எப்படி இந்த மாட்டான் சுக்கா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த வார இறுதில் செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
- குக்கர்
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு:
- 2 ஸ்பூன் மல்லி
- 2 ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் மிளகு
- 2 ஏலக்காய்
- 3 இலவங்கம்
- 3 பட்டை
- வர மிளகாய் காரத்திற்க்கேற்ப
வதக்குவதற்கு:
- ½ கிலோ மட்டன்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- உப்பு தேவையான அளவு
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- கருவேப்பிலை கொஞ்சம்
- கொத்தமல்லி தலை கொஞ்சம் நறுக்கியது
செய்முறை
- முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து அதில் ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி அத்துடன் மஞ்சள் தூள், வேகுவதற்கு கொஞ்சம் உப்பு சேர்த்து மூடி போட்டு 4 விசில் வேக விட்டு எடுக்கவும்.
- அடித்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்சில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- மட்டன் வெந்ததும் ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த மட்டனை அந்த தண்ணீருடன் அப்படியே இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துகொள்ளவும். பிறகு அது தண்ணீர் சுருண்டும் வரை வேகவிடவும்.
- மட்டனில் உள்ள தண்ணீர் சுண்டுனதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கவும்.