சண்டே என்றாலே மட்டன், சிக்கன் தான். வீட்டை விட்டு வெளியே ஹாஸ்டலில் தங்கி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அம்மா கையால் மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு கிடைக்காதே.புதிதாக சமைக்க பழகுபவர் ஆனாலும் நீங்கள் பேச்சுலர்ஸ் ஆக இருந்தாலும் சூப்பராக சுவையாக சுலபமாக மட்டன் குழம்பு வைக்கலாம். இந்த குறிப்பை மட்டும் பார்த்து , எல்லோராலும் சுலபமாக வைக்கும் அளவுக்கு ஒரு அரைத்து விட்ட மட்டன் குழம்பு.
அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா? மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். . அந்த அளவிற்கு இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மிகவும் அருமையான நறுமணத்தை கொடுக்கின்றன. அவ்வாறு மசாலா சுவையில் இப்படி அரைத்து விட்ட மட்டன் குழம்பு ஒருமுறை குழம்பு செய்து பாருங்கள், வாசனை மட்டுமல்ல சாப்பிடவும் அருமையாக இருக்கும், எனவே குழந்தைகள் இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த அரைத்து விட்ட மட்டன் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
அரைத்து விட்ட மட்டன் குழம்பு | Araithu Vitta Mutton Kulambu In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 3/4 கிலோ மட்டன்
- 1/4 கிலோ சின்ன வெங்காயம் நறுக்கியது
- 1 நறுக்கியது தக்காளி
- 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 பட்டை
- 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையானஅளவு
வறுத்து அரைக்க வேண்டியவை
- 10 வரமிளகாய்
- கறிவேப்பிலை சிறிது
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- வெங்காயம் சிறிதளவு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1/2 மூடி தேங்காய்
- 1 டீஸ்பூன் கசகசா
செய்முறை
- முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும்.
- அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்