பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியில் நுரையீரல் வாங்கி இந்த வாரம் சுக்கா செஞ்சி பாருங்க!
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிர
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. மசாலா பொருட்களை வறுத்து செய்யும் இந்த நுரையீரல் சுக்கா சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சலிப்புதான் ஏற்படும். அதனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும்.
ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நுரையீரல் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இந்த நுரையீரல் சுக்கா கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஆடு நுரையீரலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் வேறு உண்டு. இந்த நுரையீரல் சுக்கா எப்படி தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மட்டன் நுரையீரல் பொரியல் இப்படி ஒரு முறை வீட்டில் இப்படி சமைத்து பாருங்க! இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!