பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியில் நுரையீரல் வாங்கி இந்த வாரம் சுக்கா செஞ்சி பாருங்க!

- Advertisement -

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. மசாலா பொருட்களை வறுத்து செய்யும் இந்த நுரையீரல் சுக்கா சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சலிப்புதான் ஏற்படும். அதனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும்.

-விளம்பரம்-

ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நுரையீரல் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இந்த நுரையீரல் சுக்கா கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஆடு நுரையீரலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் வேறு உண்டு. இந்த நுரையீரல் சுக்கா எப்படி தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

நுரையீரல் சுக்கா | Mutton Lungs Sukka Recipe In Tamil

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. மசாலா பொருட்களை வறுத்து செய்யும் இந்த நுரையீரல் சுக்கா சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சலிப்புதான் ஏற்படும். அதனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Mutton Lungs Sukka
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 நுரையீரல்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 5 வர‌ மிளகாய்
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் மல்லி
  • 1 பட்டை கிராம்பு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் நுரையீரலை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் நுரையீரலை குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றாமல் சோம்பு, மிளகு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து வேகவைத்த நுரையீரல் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பின் இது கொதித்து தண்ணீர் வற்றியதும் மல்லி இலைகளைச் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நுரையீரல் சுக்கா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 105kcal | Carbohydrates: 15.9g | Protein: 42.2g | Fat: 8.6g | Sodium: 151mg | Potassium: 125mg | Fiber: 2.8g | Vitamin A: 16IU | Vitamin C: 334mg | Calcium: 23mg | Iron: 60mg

இதனையும் படியுங்கள் : மட்டன் நுரையீரல் பொரியல் இப்படி ஒரு முறை வீட்டில் இப்படி சமைத்து பாருங்க! இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!