மட்டன் நுரையீரல் பொரியல் இப்படி ஒரு முறை வீட்டில் இப்படி சமைத்து பாருங்க! இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

- Advertisement -

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஆட்டு நுரையீரல் பொரியல் எப்படி சுவையாக சமைப்பது என்பதனை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

-விளம்பரம்-

அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு நுரையீரல் பொரியல் இது..  சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை விட ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும்.

- Advertisement -

 நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும் . சுலபமாக செய்யக்கூடிய, குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நுரையீரல் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். வாங்க இந்த நுரையீரல் பொரியல் எப்படி செய்வது, என்று பார்ப்போம்.

Print
2 from 1 vote

மட்டன் நுரையீரல் பொரியல் | Mutton Lungs Stir Fry In Tamil

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாககிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியைஉணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலைசமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது.இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஆட்டு நுரையீரல் பொரியல் எப்படி சுவையாகசமைப்பது என்பதனை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Mutton Lungs Stir Fry
Yield: 4
Calories: 649kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 நுரையீரல்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • எண்ணெய் தேவைக் கேற்ப
  • உப்பு தேவைக் கேற்ப

செய்முறை

  • நுரையீரலை நல்ல வெள்ளையாக வரும் வரை சுத்தம் செய்யவும். பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்,
  • கடாயில் நுரையீரலை போட்டு கரம் மசாலாத்தூள், உப்பு போட்டு 2 குவளை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
     
  • பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்துஇஞ்சி பூண்டு விழுதை போட்டு பொரிய விட்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு கிளறவும்
  • வேக வைத்த நுரையீரலை போட்டு நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி சேர்ந்தால் போல் வந்ததும் அடுப்பைஅணைக்கவும்.
  • சுவையான நுரையீரல் பொரியல் ரெடி.

Nutrition

Serving: 300g | Calories: 649kcal | Carbohydrates: 23g | Protein: 56g | Sodium: 235mg | Potassium: 698mg | Sugar: 3.9g | Calcium: 23mg