ருசியான நீலகிரி மட்டன் குருமா இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும் சுவையில் இருக்கும் !

- Advertisement -

சுவையான மட்டன் நீலகிரி குருமா , ஒரு நீலகிரியில் செய்யப்படும் மிகவும் பிரபலமாக இருக்கும் அருமையான மட்டன் குருமா. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மட்டன் நீலகிரி குருமாசெய்து சாப்பிட்டு பாருங்கள். அசைவ புரோட்டீன் உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஆட்டுக்கறியில் கலோரிகள் குறைவு.  எனவே ஆட்டுக்கறியை, வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  

-விளம்பரம்-

 அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இந்த மட்டன் நீலகிரி குருமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

- Advertisement -
Print
No ratings yet

மட்டன் நீலகிரி குருமா | Mutton Neelagiri Kuruma

சுவையான மட்டன் நீலகிரி குருமா , ஒரு நீலகிரியில் செய்யப்படும் மிகவும் பிரபலமாக இருக்கும் அருமையானமட்டன் குருமா. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும்விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மட்டன் நீலகிரி குருமாசெய்து சாப்பிட்டு பாருங்கள்.அசைவ புரோட்டீன் உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஆட்டுக்கறியில் கலோரிகள் குறைவு.  எனவே ஆட்டுக்கறியை, வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால்,உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும்சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல்சாப்பிடுவார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Mutton Neelakiri Kurma
Yield: 4
Calories: 213kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 மட்டன்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 3 தேக்கரண்டி தனியா தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

தாளிக்க:

  • பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா 2

அரைக்க 1

  • 2 துண்டு தேங்காய்
  • 1 தேக்கரண்டி கசகசா

அரைக்க 2:

  • புதினா, கொத்தமல்லி தலா அரை கட்டு
  • 2 பச்சைமிளகாய்

செய்முறை

  • குக்கரில் மட்டனுடன் மஞ்சள் தூள், ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கலவை கொதித்ததும் தீயை மிதமாக வைத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  • கொதித்ததும் வேக வைத்த மட்டனை சேர்த்து உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • மட்டனுடன் சேர்ந்து நன்கு கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் புதினா விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.குருமா கெட்டியானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான மட்டன் நீல்கிரி குருமா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 213kcal | Carbohydrates: 34.48g | Fat: 13g | Cholesterol: 1mg | Sodium: 120mg | Potassium: 19.22mg | Fiber: 8.7g | Sugar: 4g | Calcium: 1055mg