சுட சுட ருசியான மட்டன் சூப் ஒருமுறை இப்படி செய்து குடிச்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்ங!

- Advertisement -

மட்டன் சூப் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சூப் வகை. குறிப்பாக தென்னிந்தியாவில் இதற்கு ஒரு தனி மவுசு உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மட்டன் சூப் ஃபேவரட் என்றால் அது மிகை அல்ல.

-விளம்பரம்-

சூப்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சூப், மட்டன் சூப், ஆட்டுக்கால் சூப், தக்காளி சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், மற்றும் தக்காளி சூப் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு அட்டகாசமான முறையில் செய்யப்படும் சூப். மட்டன் சூப்பை வெவ்வேறு பகுதிகளில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.

- Advertisement -

பெரும்பாலும் எந்த வகையில் இதை சமைத்தாலும் இவை அட்டகாசமான சுவையில் தான் இருக்கும். இந்த சூப்பை செய்து முடித்து குக்கர் மூடியை திறக்கும்போது இதன் வாசம் வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கொண்டு வந்துவிடும். அது மட்டுமின்றி மட்டன் சூப்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதில் சிறிது மிளகு தூள் அதிகமாக போட்டு பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும்.

Print
No ratings yet

மட்டன் சூப் | Mutton Soup Recipe In Tamil

பெரும்பாலும் எந்த வகையில் இதை சமைத்தாலும் இவை அட்டகாசமான சுவையில் தான் இருக்கும். இந்த சூப்பை செய்து முடித்து குக்கர் மூடியை திறக்கும்போது இதன் வாசம் வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கொண்டு வந்துவிடும். அது மட்டுமின்றி மட்டன் சூப்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதில் சிறிது மிளகு தூள் அதிகமாக போட்டு பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Soup
Cuisine: tamilnadu
Keyword: Mutton Soup
Yield: 4
Calories: 902kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ மட்டன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • கொத்தமல்லி இலை சிறிது
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவையானஅளவு
  • 1 தக்காளி

செய்முறை

  • முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு, வர மல்லி, சீரகம்,மிளகு, தக்காளி அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் 4 கிராம்பு, பிரியாணி இலை, சிறிதளவு சோம்பு, பட்டை சேர்த்து பொரிந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும் மட்டன் வேகும் அளவை விட ஒரு மடங்கு தண்ணீர் அதிகமாக வைக்கவும்.
  • பின் மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை வேகவிடவும் 4 லிருந்து 5 விசில் விடவும். பின்னர் விசில் அடங்கியதும் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
  • சுவையான ஆரோக்கியமான மட்டன் சூப் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 902kcal | Carbohydrates: 56g | Protein: 4.6g | Cholesterol: 7.8mg | Sodium: 1092mg | Potassium: 782mg | Calcium: 34mg