வீடுகளில் பெரியவர்கள் இருந்தார்கள் என்றால் குழந்தை பெற்றவர்களுக்கு ஆட்டுக்கறி குழம்பு வைத்து சாப்பிட கொடுப்பார்கள். இவ்வாறு குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தை பெற்றவர்கள் இடுப்பு வலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.
அசைவ உணவான ஆட்டிறைச்சியானது, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. இதில், பல்வேறு மருத்துவ பலன்களும் உள்ளது. எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்வாரத்திற்கு ஒரு முறையாவது ஆட்டின் தலை கறியில் கிரேவி வைத்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இந்த தலைக்கறி கிரேவி எவ்வாறு பாட்டி கைப்பக்குவத்தில் சுவையாக செய்யலாம் என்பதைப் பற்றி தான் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
மட்டன் தலைக்கறி கிரேவி | Goat Head Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 ஆட்டுதலை சுத்தம் செய்தது
- 3 வெங்காயம்
- 2 தக்காளி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 பச்சை மிளகாய்
- 4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 மஞ்சள்தூள்
- எண்ணெய் தேவைக்கேற்ப
- 2 ஏலக்காய்
- 3 கிராம்பு
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
- கறியை சுத்தம் செய்யவும். மூளையை மட்டும் தனியே எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் இப்போது தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறவும்
- பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும். பின் கறியை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து குக்கரில் 2 விசிலுக்கு வைக்கவும்.
- பின்னர் மூளையை (முதலிலேயே மூளையை சேர்ப்பதால் கரைந்து விடும்) சேர்த்து சிம்மில் வைத்து ருக்கரை மூடாமல் வேகவிடவும்
- தலைக்கறி கிரேவி தயார்.