Home அசைவம் ரொம்ப சிம்பிளா இந்த மட்டன் உப்புக்கறி செஞ்சு பாருங்க!

ரொம்ப சிம்பிளா இந்த மட்டன் உப்புக்கறி செஞ்சு பாருங்க!

ரொம்பவே சிம்பிளான இந்த மட்டன் உப்புக்கறி செய்வதற்கு நமக்கு குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் அது மட்டும் இல்லாம நிறைய மசாலாக்கள் போட்டு சாப்பிட விரும்பாதவங்க இந்த மட்டன் உப்பு கறி செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே பிடிக்கும். நமக்கு வேலையும் மிச்சம் நிறைய மசாலாக்கள் அரைக்க தேவையில்லை. ஆனா மசாலாக்கள் போட்டு நம்ம வைக்கிற அந்த கிரேவியை விட இந்த மட்டன் உப்பு கறி டேஸ்ட்ல சூப்பரா இருக்கும். சமைக்கவே தெரியாதவங்க கூட இந்த மட்டன் உப்பு கறியை ரொம்ப டேஸ்டா சமைச்சிடுவீங்க.

-விளம்பரம்-

காரணம் இதுக்கு நிறைய மசாலாக்கள் தேவை இல்லை ரொம்பவே கம்மியான பொருட்களை வைத்து அட்டகாசமான ஒரு சுவையில் மட்டன் உப்புக்கறி நீங்க செஞ்சு முடிச்சிடுவீங்க. இந்த மட்டன் உப்புக்கறி பெரியவங்களுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆக இருக்கும். காரணம் அந்த காலத்தில் எல்லாம் நிறைய மசாலாக்கள் அரைக்காமல் ரொம்ப சிம்பிளா இந்த மட்டன் உப்புக்கறி தான் வைத்து சாப்பிடுவாங்க ஆனா இப்போ எல்லாம் பெருசா இதை யாரும் செய்வது இல்ல.

அதனால நீங்க உங்க வீட்ல இந்த மட்டன் உப்பு கறியா பெரியவங்களுக்கு செஞ்சு கொடுத்தா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. பெரியவங்க மட்டும் இல்லாம குழந்தைகளும் கூட இந்த மட்டன் உப்பு கறியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. நம்ம எந்த வகையான நான்வெஜ் கிரேவி வச்சாலும் அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த மட்டன் உப்பு கறியை வைத்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம் அந்த எண்ணெயோட சேர்த்து சாப்பிடும்போது டேஸ்ட் அவ்வளவு ஒரு அருமையா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான அட்டகாசமான டேஸ்டான மட்டன் உப்பு கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

மட்டன் உப்புக்கறி | Mutton Uppu Kari Recipe In Tamil

ரொம்பவே சிம்பிளான இந்த மட்டன் உப்புக்கறி செய்வதற்கு நமக்கு குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் அது மட்டும் இல்லாம நிறைய மசாலாக்கள் போட்டு சாப்பிட விரும்பாதவங்க இந்த மட்டன் உப்பு கறி செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே பிடிக்கும். நமக்கு வேலையும் மிச்சம் நிறைய மசாலாக்கள் அரைக்க தேவையில்லை. ஆனா மசாலாக்கள் போட்டு நம்ம வைக்கிற அந்த கிரேவியை விட இந்த மட்டன் உப்பு கறி டேஸ்ட்ல சூப்பரா இருக்கும். சமைக்கவே தெரியாதவங்க கூட இந்த மட்டன் உப்பு கறியை ரொம்ப டேஸ்டா சமைச்சிடுவீங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Mutton Uppu Kari
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ மட்டன்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 20 சின்ன வெங்காயம்
  • 10 காய்ந்த மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை

  • முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நிறைய சேர்த்து சோம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்பு மட்டனை சேர்த்துக் கொள்ளவும்.
  • தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே மட்டனை நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் தூள் சேர்த்து மட்டனை நன்றாக பிரட்டி எடுக்கவும்.இடையிடையே மட்டனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • 30 நிமிடங்கள் எண்ணையிலேயே பிரட்டி மட்டன் நன்றாக வெந்தவுடன் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் உப்பு கறி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Cholesterol: 12mg | Potassium: 381mg