மழைக்கு இதமா சுட சுட மட்டன் வடை மாலை நேர ஸ்நாக்ஸாக இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

வடை அப்படின்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வருது டீயும் வடையும் தான் சிலருக்கு வடை பாயாசம் ஞாபகம் வரும். இப்படி வடை சைவத்திலேயே சாப்பிட்டு இருக்கோமே அதை அசைவத்தில் சாப்பிடுவதற்கு வழியே இல்லையா அப்படின்னு ஏங்கிட்டு இருக்கும் அசைவ பிரியர்களுக்காகவே இந்த மட்டன் வடை. இந்த மட்டன் வடை ரொம்பவுமே சுவையாகும் எல்லாரும் சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் இருக்கும். இந்த மட்டன் வடை செய்வதற்கு நம்ம பண்ண வேண்டிய ஒரே விஷயம் கடையில கொத்துக்கறி வாங்கிட்டு வர வேண்டியதுதான்.

-விளம்பரம்-

மத்தபடி நம்ம வீட்ல இருக்கிற எல்லா பொருட்களை வைத்து இந்த மட்டன் வடைய சுலபமாவே செய்திடலாம். இந்த மட்டன் வடையோடு சுவை நாவில் எப்பவுமே நர்த்தனம் ஆடிக்கிட்டே இருக்கும். இது நம்ம சாப்பிட்டதுக்கு அப்புறமும் இதோட ருசி நம்ம நாக்கிலேயே இருந்துட்டு இருக்கும். எத்தனை வடை சாப்பிட்டாலும் எண்ணிக்கை பத்தி கவலைப்படாம சாப்பிட தோணும் சுவையில இந்த மட்டன் வடை இருக்கும்.

- Advertisement -

இந்த மட்டன் வடையை எப்படி வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்யலாம் ரொம்பவே சீக்கிரம் எந்த மட்டன் வெந்துடும் மட்டன் வந்த பிறகு நம்ம வடையை தட்டி எடுத்தோம்னா நல்ல மணமான மொறு மொறு ருசியான மட்டன் வடை கிடைத்துவிடும். சரி வாங்க இந்த மட்டன் வடைய எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
1.50 from 2 votes

மட்டன் வடை | Mutton Vada Recipe In Tamil

நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து இந்த மட்டன் வடைய சுலபமாவே செய்திடலாம். இந்த மட்டன் வடையோடு சுவை நாவில் எப்பவுமே நர்த்தனம் ஆடிக்கிட்டே இருக்கும். இது நம்ம சாப்பிட்டதுக்கு அப்புறமும் இதோட ருசி நம்ம நாக்கிலேயே இருந்துட்டு இருக்கும். எத்தனை வடை சாப்பிட்டாலும் எண்ணிக்கை பத்தி கவலைப்படாம சாப்பிட தோணும் சுவையில இந்த மட்டன் வடை இருக்கும். சரி வாங்க இந்த மட்டன் வடைய எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Mutton Vadai
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • மட்டன் கொத்துகறி
  • வெங்காயம்
  • இஞ்சி பூண்டு விழுது
  • முந்திரி
  • காய்ந்த மிளகாய்
  • கசகசா
  • சோம்பு
  • கரமசாலா
  • மஞ்சள்தூள்
  • உப்பு

வடை செய்ய

  • 2 வெங்காயம்
  • 1 முட்டை
  • 3 ஸ்பூன் கடலைமாவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் எடுத்து வைத்துள்ள கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
     
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கசகசா போட்டு பொரிக்க வேண்டும்.கசகசா சோம்பு பொரிந்த பிறகு காய்ந்தமிளகாய், முந்திரி, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள கொத்துக்கறியை சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும்.
  • பிறகு இதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.பின் மட்டன் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
  • இந்த கொத்துக்கறி மொத்தமாக வெந்து தண்ணீர் எல்லாம் வற்றிய பிறகு இறக்கி வைக்கவும்.இறக்கி வைத்துள்ள கொத்துக்கறி ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துள்ள மட்டனில் வெங்காயம் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பிசறி கொள்ளவும். பிறகு அதில் முட்டை உடைத்து ஊற்றி கடலை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வடை மாவு போல் பிசறி விடவும்..
  •  பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி வைத்துள்ள வடை மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.வடைகள் இரண்டு புறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்த பிறகு எடுத்து பரிமாறினால் மணமான மொறு மொறு மட்டன் வடை தயார்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Sugar: 2.3g | Calcium: 12mg