Advertisement
அசைவம்

மட்டன் வாங்குனா இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் கோலா உருண்டை செஞ்சு பாருங்க!

Advertisement

என்னதான் நான் வெஜ்ல சிக்கன் இறால் மீன் கணவாய் நண்டு அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் நமக்கு நான் வெஜ்ன்னு சொன்னாலே நிறைய பேருக்கு மட்டன் தான் ஞாபகத்துக்கு வரும். இந்த மட்டன் வச்சு நம்ம நிறைய வெரைட்டிஸ் பண்ணலாம் மட்டன் குழம்பு மட்டன் சுக்கா மட்டன் கிரேவி அப்படின்னு மட்டன்ல செய்யக்கூடிய எல்லா டிஷ்ஷஸ்மே ரொம்ப சூப்பராவும் டேஸ்டியாவும் இருக்கும்.

தலைவாழை இலை விரிச்சு சுட சுட சாதத்தோட மட்டன் அதிகமா வச்சு குழம்பு ஊத்தி சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது எல்லாரும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். அப்படி மட்டன்ல செய்யக்கூடிய எல்லாமே ரொம்பவே அருமையான சுவையில இருக்கும் அந்த வகையில் இப்ப நம்ம மட்டன் வச்சு செய்யக்கூடிய மட்டன் கோலா உருண்டை தான் பார்க்க போறோம். இந்த மட்டன் கோலா உருண்டை பொதுவா நம்ம இப்போ ரீசண்டா ஏதாவது ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருப்போம் அந்த டேஸ்ட் நமக்கு ரொம்ப பிடிச்சு போயிருக்கும் அதே மாதிரி நம்ம வீட்லயும் ட்ரை பண்ணனும் அப்படின்னு நினைப்போம் ஆனா அதுக்கான ரெசிபி உங்களுக்கு கரெக்டா தெரியலையா அப்போ உங்களுக்காக தான் இது.

Advertisement

ஹோட்டல்ல விசேஷ வீடுகளை வைக்கக்கூடிய அதே டேஸ்ட்ல மட்டன் கோலா உருண்டை ரொம்பவே எளிமையான முறையில் நம்ம செய்யலாம். இந்த மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு அதிகமான பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்பவே குறைவான பொருட்களே போதும். ஹோட்டல் ஸ்டைல்ல ஈஸியா மட்டன் கோலா உருண்டை செய்யலாம். இப்ப வாங்க இந்த மட்டன் கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மட்டன் கோலா உருண்டை | Muttton Kola Urundai In Tamil

Print Recipe
தலைவாழை இலை விரிச்சு சுட சுட சாதத்தோட மட்டன் அதிகமா வச்சு குழம்பு ஊத்தி சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது எல்லாரும் ஒரு
Advertisement
பிடி பிடித்து விடுவார்கள். அப்படி மட்டன்ல செய்யக்கூடிய எல்லாமே ரொம்பவே அருமையான சுவையில இருக்கும் அந்த வகையில் இப்ப நம்ம மட்டன் வச்சு செய்யக்கூடிய மட்டன் கோலா உருண்டை தான் பார்க்க போறோம். இந்த மட்டன் கோலா உருண்டை பொதுவா நம்ம இப்போ ரீசண்டா ஏதாவது ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருப்போம் அந்த டேஸ்ட் நமக்கு ரொம்ப பிடிச்சு போயிருக்கும் அதே மாதிரி நம்ம வீட்லயும் ட்ரை பண்ணனும்
Advertisement
அப்படின்னு நினைப்போம் ஆனா அதுக்கான ரெசிபி உங்களுக்கு கரெக்டா தெரியலையா அப்போ உங்களுக்காக தான் இது.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword mutton kola urundai
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 354

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ மட்டன் கொத்து கறி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

Instructions

  • ஆட்டுக்கறியை எலும்பு இல்லாமல் கொத்து கறியாக வாங்கி கொள்ளவும்.
  • அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்த ஒரு குக்கரில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மூன்று விசில் விட்டு எடுக்கவும்
  • வேகவைத்த கொத்துக்கவியை நன்றாக ஆறவைத்த அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ளவும்
  • பின்பு அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சோம்பு இஞ்சி பூண்டு விழுது தேங்காய் பால் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன் கடலை மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  • ஒருகடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Cholesterol: 2mg | Potassium: 352mg

இதையும் படியுங்கள் : ரொம்ப சிம்பிளா இந்த மட்டன் உப்புக்கறி செஞ்சு பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

17 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

24 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago