Home அசைவம் மட்டன் வாங்குனா இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் கோலா உருண்டை செஞ்சு பாருங்க!

மட்டன் வாங்குனா இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் கோலா உருண்டை செஞ்சு பாருங்க!

என்னதான் நான் வெஜ்ல சிக்கன் இறால் மீன் கணவாய் நண்டு அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் நமக்கு நான் வெஜ்ன்னு சொன்னாலே நிறைய பேருக்கு மட்டன் தான் ஞாபகத்துக்கு வரும். இந்த மட்டன் வச்சு நம்ம நிறைய வெரைட்டிஸ் பண்ணலாம் மட்டன் குழம்பு மட்டன் சுக்கா மட்டன் கிரேவி அப்படின்னு மட்டன்ல செய்யக்கூடிய எல்லா டிஷ்ஷஸ்மே ரொம்ப சூப்பராவும் டேஸ்டியாவும் இருக்கும்.

-விளம்பரம்-

தலைவாழை இலை விரிச்சு சுட சுட சாதத்தோட மட்டன் அதிகமா வச்சு குழம்பு ஊத்தி சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது எல்லாரும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். அப்படி மட்டன்ல செய்யக்கூடிய எல்லாமே ரொம்பவே அருமையான சுவையில இருக்கும் அந்த வகையில் இப்ப நம்ம மட்டன் வச்சு செய்யக்கூடிய மட்டன் கோலா உருண்டை தான் பார்க்க போறோம். இந்த மட்டன் கோலா உருண்டை பொதுவா நம்ம இப்போ ரீசண்டா ஏதாவது ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருப்போம் அந்த டேஸ்ட் நமக்கு ரொம்ப பிடிச்சு போயிருக்கும் அதே மாதிரி நம்ம வீட்லயும் ட்ரை பண்ணனும் அப்படின்னு நினைப்போம் ஆனா அதுக்கான ரெசிபி உங்களுக்கு கரெக்டா தெரியலையா அப்போ உங்களுக்காக தான் இது.

ஹோட்டல்ல விசேஷ வீடுகளை வைக்கக்கூடிய அதே டேஸ்ட்ல மட்டன் கோலா உருண்டை ரொம்பவே எளிமையான முறையில் நம்ம செய்யலாம். இந்த மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு அதிகமான பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்பவே குறைவான பொருட்களே போதும். ஹோட்டல் ஸ்டைல்ல ஈஸியா மட்டன் கோலா உருண்டை செய்யலாம். இப்ப வாங்க இந்த மட்டன் கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

மட்டன் கோலா உருண்டை | Muttton Kola Urundai In Tamil

தலைவாழை இலை விரிச்சு சுட சுட சாதத்தோட மட்டன் அதிகமா வச்சு குழம்பு ஊத்தி சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது எல்லாரும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். அப்படி மட்டன்ல செய்யக்கூடிய எல்லாமே ரொம்பவே அருமையான சுவையில இருக்கும் அந்த வகையில் இப்ப நம்ம மட்டன் வச்சு செய்யக்கூடிய மட்டன் கோலா உருண்டை தான் பார்க்க போறோம். இந்த மட்டன் கோலா உருண்டை பொதுவா நம்ம இப்போ ரீசண்டா ஏதாவது ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருப்போம் அந்த டேஸ்ட் நமக்கு ரொம்ப பிடிச்சு போயிருக்கும் அதே மாதிரி நம்ம வீட்லயும் ட்ரை பண்ணனும் அப்படின்னு நினைப்போம் ஆனா அதுக்கான ரெசிபி உங்களுக்கு கரெக்டா தெரியலையா அப்போ உங்களுக்காக தான் இது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: mutton kola urundai
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ மட்டன் கொத்து கறி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை

  • ஆட்டுக்கறியை எலும்பு இல்லாமல் கொத்து கறியாக வாங்கி கொள்ளவும்.
  • அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்த ஒரு குக்கரில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மூன்று விசில் விட்டு எடுக்கவும்
  • வேகவைத்த கொத்துக்கவியை நன்றாக ஆறவைத்த அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ளவும்
  • பின்பு அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சோம்பு இஞ்சி பூண்டு விழுது தேங்காய் பால் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன் கடலை மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  • ஒருகடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Cholesterol: 2mg | Potassium: 352mg

இதையும் படியுங்கள் : ரொம்ப சிம்பிளா இந்த மட்டன் உப்புக்கறி செஞ்சு பாருங்க!