Home அசைவம் காரசாரமான ருசியில் நாட்டுக்கோழி மிளகு குழம்பு இனி இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

காரசாரமான ருசியில் நாட்டுக்கோழி மிளகு குழம்பு இனி இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி கிரேவி செய்து சாப்பிட்டால், கிரேவியின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான நாட்டுக்கோழி மிளகு குழம்பு பற்றி தான். நாட்டுக்கோழியை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் இந்த நாட்டுக்கோழி மிளகு குழம்பு. இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது.

-விளம்பரம்-

இந்த குழம்பு நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம்.இந்த வாரம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நாட்டுக்கோழியை வாங்கி நாட்டுக்கோழி மிளகு குழம்பு செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.

Print
No ratings yet

நாட்டுக்கோழி மிளகு குழம்பு | Naatukozhi Milagu Kulambu Recipe In Tamil

அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி கிரேவி செய்து சாப்பிட்டால், கிரேவியின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான நாட்டுக்கோழி மிளகு குழம்பு பற்றி தான். நாட்டுக்கோழியை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் இந்த நாட்டுக்கோழி மிளகு குழம்பு.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Naatukozhi Milagu Kulambu
Calories: 215kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி
  • 1 மண் சட்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி நாட்டுக்கோழி
  • 2 கப் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1/4 கப் தேங்காய் துருவல்

அரைக்க :

  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 10 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி

செய்முறை

  • முதலில் நாட்டுக்கோழியை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவலும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், தயிர் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • குழம்பு கொதித்து பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான நாட்டுக்கோழி மிளகு குழம்பு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 215kcal | Carbohydrates: 13.9g | Protein: 18g | Fat: 5.1g | Sodium: 70mg | Potassium: 198mg | Fiber: 1.27g | Vitamin A: 95IU | Vitamin C: 406mg | Calcium: 11mg | Iron: 9mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை நாட்டுக்கோழி வாங்கினால் இப்படி கோலா உருண்டை இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!