கடல் உணவுகள்ள நண்டுகளுக்கு அப்படின்னு ஒரு தனி இடமே இருக்கு. நண்டு மேல விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்காங்க. இந்த நண்டுல கிரேவி செய்தாலும் சரி குழம்பு செய்தாலும் சரி வறுவல் செய்தாலும் சரி ஆம்லெட் செய்தா கூட சாப்பிடுவதற்கு அத்தனை பேர் இருக்காங்க. அதிக அளவு கால்சியம் அமிலங்களும் நிறைஞ்சது தான் இந்த நண்டு. நண்டுல ரோஸ்ட் பண்ணி சாப்பிட்டால் அவ்வளவு சுவையா இருக்கும் அது சளிக்கும் காய்ச்சலுக்கும் ரொம்பவே நல்லது இந்த நண்டு .
நண்டுல இருக்கிற வெறும் சதைகளை மட்டும் எடுத்து அதை முட்டையோட சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். அப்படி இந்த நண்டுல நம்ம ரோஸ்ட் பண்ண போறோம். அந்த ரோஸ்ட் அவ்வளவு சுவையாக இருக்கும் அப்படின்னு பாத்துக்கலாம். இந்த நண்டு ரோஸ்ட் எல்லா சாதத்துக்கு கூடயும் சைடு டிஷ்ஷா சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையா இருக்கும். சொல்லப்போனால் ரசத்துக்கும் தயிர் சாதத்துக்கும் அப்படி ஒரு காம்பினேஷனா இருக்கும்.
இந்த நண்டு ரோஸ்ட் ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருளை வைத்து எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி செய்திடலாம் இந்த நண்டு ரோஸ்டை. இந்த நண்டு ரோஸ்ட் பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. நீங்க வாங்குற நண்டு உங்களுக்கு கிடைக்காம வீட்ல இருக்கிறவங்க சாப்பிடற அளவுக்கு அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். வாங்க இந்த நண்டு ரோஸ்ட் எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.
நண்டு ரோஸ்ட் | Nandu roast recipe in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ நண்டு
- 10 சின்ன வெங்காயம்
- 2 துண்டு இஞ்சி
- 10 பல் பூண்டு
- 4 பச்சைமிளகாய்
- 1 கைப்பிடி புதினா
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 வெங்காயம்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் மிளகு
- 1/2 எலுமிச்சை பழம்
- 1 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1 ஸ்பூன் மல்லிதூள்
- 2 ஸ்பூன் தயிர்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் நண்டை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.வெங்காயத்தை பொடியாக நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை நன்றாக மொறுமொறுவென்று பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் சோம்பு, மிளகு பொரித்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.அதில் எலுமிச்சை பழசாறு மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்து வைத்துள்ள மசாலாவில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ள வேண்டும்.
- பிறகு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள நண்டை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் தயிர் நண்டுக்கு தேவையான அளவு உப்பு அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள நண்டை மிதமான தீயில் வைத்து ரோஸ்ட் செய்ய ஆரம்பிக்கவும்.
- ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் நன்றாக திருப்பி போட்டு நண்டு வெந்த பிறகு எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான நண்டு ரோஸ்ட் தயார்.