Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி கிரேவி செய்து சாப்பிட்டால், கிரேவியின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவியை பற்றி தான். நாட்டுக்கோழியை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் இந்த நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி. இந்த கிரேவி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. இந்த கிரேவி நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம்.இந்த வாரம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நாட்டுக்கோழியை வாங்கி நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.

நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி | Nattukoli Karuveppilai Gravy Recipe In Tamil

Print Recipe
அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி கிரேவி செய்து சாப்பிட்டால், கிரேவியின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவியை பற்றி தான்.
Advertisement
நாட்டுக்கோழியை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் இந்த நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி.
Course dinner, LUNCH
Cuisine Indian
Keyword Nattukoli Karuveppilai Gravy
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 128

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்

Ingredients

  • 1/2 கி நாட்டுக்கோழி
  • 1 கப் கறிவேப்பில்லை
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 10 முந்திரி பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 1 துண்டு பட்டை
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 தக்காளி
  • 4 கிராம்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 வர ‌மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சோம்பு, கிராம்பு, பட்டை, முந்திரி பருப்பு, சீரகம், மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  • சிக்கன் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரை விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • பின் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
  • பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கிரேவியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நாட்டுக்கோழி கிரேவி கறிவேப்பிலை தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 128kcal | Carbohydrates: 5.7g | Protein: 26g | Fat: 2.7g | Sodium: 48mg | Potassium: 189mg | Vitamin A: 33IU | Vitamin C: 11.1mg | Calcium: 18mg | Iron: 15mg

இதனையும் படியுங்கள் : ஒரு தடவை இந்த மாதிரி கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த சாதத்துக்கு அடிமையாகிடுவீங்க!!!

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 22 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். சில நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். லாபம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உண்டு.…

53 நிமிடங்கள் ago

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

13 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

17 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago