- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி கிரேவி செய்து சாப்பிட்டால், கிரேவியின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவியை பற்றி தான். நாட்டுக்கோழியை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் இந்த நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி. இந்த கிரேவி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. இந்த கிரேவி நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம்.இந்த வாரம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நாட்டுக்கோழியை வாங்கி நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.
இதனையும் படியுங்கள் : ஒரு தடவை இந்த மாதிரி கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த சாதத்துக்கு அடிமையாகிடுவீங்க!!!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சோம்பு, கிராம்பு, பட்டை, முந்திரி பருப்பு, சீரகம், மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
சிக்கன் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரை விட்டு வேகவைத்து கொள்ளவும்.
பின் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கிரேவியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நாட்டுக்கோழி கிரேவி கறிவேப்பிலை தயார்.






