வீட்டில் இருக்க தனியா வகைகளை இந்த முறையில் பணியாரம் செய்து பாருங்கள். இட்லி தோசைக்கு பதிலா வெறும் சில நிமிடத்தில் இப்படியும் ஒரு பணியாரம் சுடலாமே.வீட்டில் இட்லி தோசை மாவு இல்லாத சமயத்தில் உடனடியாக ஏதாவது காலை உணவு செய்ய வேண்டும் என்றாலும் இந்த பணியாரம் செய்யலாம். இரவு டின்னருக்கும் இந்த பணியாரம் செய்யலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு இந்த பணியாரத்தை செய்து கொடுக்கலாம். நவ தானியங்கள் சேர்த்து மிக மிக ஆரோக்கியமாக இந்த பணியாரத்தை செய்யப்போகின்றோம்.
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் முதலில் கடைபிடிக்க வேண்டியது உணவு முறைகளில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து உண்பது தான். ஏனெனில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை உண்டாக்குவதும் இந்த உணவு தான், அதை சரி செய்வதும் பெரும்பாலும் உணவு தான். ஆகவே உண்ணும் உணவிற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து எது போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் நல்லது என்பவற்றை தெரிந்து கொண்டு எடுத்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் நேராது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான நவதானிய பணியாரம் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்
நவதானிய பணியாரம் | Navadhania Paniyaaram In Tamil
Equipment
- 1 பணியார கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் சிவப்பரிசி
- 1/2 புழுங்கல் அரிசி
- 1/4 கப் உளுந்து
- 1/4 கப் ஊறவைத்த ஜவ்வரிசி
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 1/4 கப் கொண்டைக்கடலை
- 1/4 கப் சோயா
- 3 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 3 டீஸ்பூன் பாசிப்பருப்பு
- 10 காய்ந்தமிளகாய்
- 1/2 டீஸ்பூன் பொடித்த மிளகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை சிறிது
- கொத்தமல்லி சிறிது
- உப்பு தேவைக்கு
- நல்லெண்ணெய் தேவைக்கு
செய்முறை
- கொண்டைக்கடலை, சோயா இரண்டையும் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
- சிவப்பரிசி,புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்தமிளகாய் சேர்த்து நைசான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- பின்புமிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து அரைமணி நேரம் புளிக்க விடவும்.
- பின்பு உப்பு போட்டு குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் எடுத்து மிளகாய், பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.