- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
இட்லி தோசைக்கெல்லாம் சாம்பார் சட்னி எப்படி நல்ல சுவையான சைட் டிஷ்ஷோ அதே போலத் தான் இந்த நவரத்தின குருமாவும். சாதாரணமாக சட்னி சாம்பார் வைத்து சாப்பிடுவதை காட்டிலும் இந்த நவரத்தின குருமாவை ஊற்றி சாப்பிடும் பொழுது சப்பாத்தி, பூரி, இட்லியும் தோசையும் சுவை அதிகமாகவே இருக்கும். அதே நேரத்தில் கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு சொட்டு கூட எண்ணெய் சேர்க்காமல் சுலபமாக நவரத்தின குருமாவை சீக்கிரத்தில் செய்து விடலாம்.
உங்க வீட்ல நீங்க மட்டன் வாங்கி இருக்க மாட்டீங்க. பல பயிறு வகைகளை வைத்து தான் குருமா செய்வீங்க. ஆனா பக்கத்து வீட்டில இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உங்க வீட்ல மட்டனா? அப்படின்னு நிச்சயம் கேட்பாங்க. அந்த மட்டன் வாசம் இந்த நவரத்தின குருமாவில் வீசும். அப்படி ஒரு சூப்பர் நவரத்தின குருமா ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். வீட்டில் இருக்கும் சில மசாலா பொருட்களுடன் பல கடலை, பயிறு வகைகளை வைத்து அட்டகாசமான நாவிற்கு ருசியை தரும் நவரத்தின குருமா ரெசிபி உங்களுக்காக .
இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு ஸ்டைல் ருசியான காரக்குழம்பு, அட்டகாசமான சுவையில் இப்படி ஒரு தரம் செஞ்சு பாருங்கள்!
Ingredients
Method
முதலில் தானிய வகைகளை 8 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும், இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றைஅரைத்துக் கொள்ளவும்.
பிறகு பின்ஸ், காரட், உருளைக்கிழங்கு,தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.பிறகு ஒரு வானாலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
சிறிது சிவந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது, கரம்மசாலா, மிளகு தூள், மல்லி தூள், காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கி தானியங்களையும் அதில் போட்டு விடவும்.
உப்பு, தேங்காய் விழுது சேர்த்துநன்கு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கும் போது கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாறவும்.






