Advertisement
சைவம்

ருசியான சிவகங்கை நெல்லி சோறு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

அந்த காலத்தில் முன்னோர்கள் அறுசுவை விருந்து என்ற பழக்கத்தையே கொண்டு வந்தார்கள். ஆனால் அறுசுவைகளில் பெரும்பாலும் நாம் துவர்ப்புச் சுவையை சேர்த்துக் கொள்வதே கிடையாது. நெல்லிக்காயில் துவர்ப்புத்தன்மை உண்டு. உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய

இதையும் படியுங்கள்: ருசியான தர்பூசணி விதை சோறு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

நெல்லிக்காயை வைத்து சுலபமாக எப்படி நெல்லி சாதம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நெல்லி சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சிவகங்கை நெல்லி சோறு | Nelli Soru Recipe in Tamil

Print Recipe
அந்த காலத்தில் முன்னோர்கள் அறுசுவை விருந்து என்ற பழக்கத்தையே கொண்டு வந்தார்கள். ஆனால் அறுசுவைகளில் பெரும்பாலும் நாம் துவர்ப்புச் சுவையை சேர்த்துக் கொள்வதே கிடையாது. நெல்லிக்காயில் துவர்ப்புத்தன்மை உண்டு. உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய நெல்லிக்காயை வைத்து சுலபமாக எப்படி நெல்லி சாதம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Advertisement
இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Nelli Soru, நெல்லி சோறு
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 649

Equipment

  • 1 கடாய்
  • கரண்டி

Ingredients

  • 2 cup உதிரியாக வடித்த சாதம்
  • 3 பெரிய நெல்லிக்காய்
  • 4 வத்தல் மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சிறிது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 3 tbsp நல்லெண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • நெல்லி சாதம் செய்ய முதலில் வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். நெல்லிக்காயின் கொட்டையை எடுத்துவிட்டு பொடியாகத் துருவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடவும்.
  • பிறகு கறிவேப்பிலை, வத்தல் மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு கிளறவும்.அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, 3 நிமிட நேரம் வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும். நெல்லிக்காய் கலவையை சாதத்துடன் கிளறவும். சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

Nutrition

Serving: 450gm | Calories: 649kcal | Carbohydrates: 54g | Sodium: 645mg | Potassium: 234mg | Sugar: 36g | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

7 நிமிடங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

10 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

10 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

11 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

12 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

16 மணி நேரங்கள் ago