- Advertisement -
அந்த காலத்தில் முன்னோர்கள் அறுசுவை விருந்து என்ற பழக்கத்தையே கொண்டு வந்தார்கள். ஆனால் அறுசுவைகளில் பெரும்பாலும் நாம் துவர்ப்புச் சுவையை சேர்த்துக் கொள்வதே கிடையாது. நெல்லிக்காயில் துவர்ப்புத்தன்மை உண்டு. உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய
-விளம்பரம்-
இதையும் படியுங்கள்: ருசியான தர்பூசணி விதை சோறு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
நெல்லிக்காயை வைத்து சுலபமாக எப்படி நெல்லி சாதம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நெல்லி சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சிவகங்கை நெல்லி சோறு | Nelli Soru Recipe in Tamil
அந்த காலத்தில் முன்னோர்கள் அறுசுவை விருந்து என்ற பழக்கத்தையே கொண்டு வந்தார்கள். ஆனால் அறுசுவைகளில் பெரும்பாலும் நாம் துவர்ப்புச் சுவையை சேர்த்துக் கொள்வதே கிடையாது. நெல்லிக்காயில் துவர்ப்புத்தன்மை உண்டு. உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய நெல்லிக்காயை வைத்து சுலபமாக எப்படி நெல்லி சாதம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்
Yield: 4 People
Calories: 649kcal
Equipment
- 1 கடாய்
- கரண்டி
தேவையான பொருட்கள்
- 2 cup உதிரியாக வடித்த சாதம்
- 3 பெரிய நெல்லிக்காய்
- 4 வத்தல் மிளகாய்
- கறிவேப்பிலை
- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சிறிது
- ½ tsp மஞ்சள் தூள்
- 3 tbsp நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- நெல்லி சாதம் செய்ய முதலில் வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். நெல்லிக்காயின் கொட்டையை எடுத்துவிட்டு பொடியாகத் துருவிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடவும்.
- பிறகு கறிவேப்பிலை, வத்தல் மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு கிளறவும்.அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, 3 நிமிட நேரம் வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும். நெல்லிக்காய் கலவையை சாதத்துடன் கிளறவும். சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.
Nutrition
Serving: 450gm | Calories: 649kcal | Carbohydrates: 54g | Sodium: 645mg | Potassium: 234mg | Sugar: 36g | Calcium: 34mg