Advertisement
சைவம்

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

Advertisement

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக ஒரு இன்ஸ்டன்ட் தோசை மாவை வீட்டிலேயே 5 நிமிடத்தில் தயாரிக்கலாம். அதுவும் உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருந்தால், சத்தான ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் தோசையானது மிகவும் சத்தானது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம்.

ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டு சலிப்பாக இருந்தால், மாற்றாக இந்த தோசையை செய்யலாம். இந்த தோசை நொடிப்பொழுதில் செய்யலாம். இது தவிர ஓட்ஸ் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

Advertisement

ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை | Oats and Peas Dosa Recipe in Tamil

Print Recipe
காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக ஒரு இன்ஸ்டன்ட் தோசை மாவை வீட்டிலேயே 5 நிமிடத்தில் தயாரிக்கலாம். அதுவும் உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருந்தால், சத்தான ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் தோசையானது மிகவும் சத்தானது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர்
Advertisement
ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம். இது தவிர ஓட்ஸ் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword Dosai
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 140

Equipment

  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

Ingredients

  • 1/2 கப் ஓட்ஸ்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் ஓமம்
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • நெய் தேவையானஅளவு

Instructions

  • ஓட்ஸை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்து வைத்து கொள்ளவும்.
  • பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி, ஓமம், கொத்தமல்லித்தழை, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஓட்ஸை நன்கு கைகளால் மசித்து அரைத்த விழுதுடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • அதை தோசை கல்லில் தோசை மாதிரி நெய் அல்லது எண்ணெய் விட்டு வார்த்து எடுக்கவும்.
  • இது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கு உகந்தது. இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிடும். இதற்கு எல்லா வகையான சட்னியும் நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 140kcal | Carbohydrates: 28g | Protein: 5g | Fat: 2.5g | Saturated Fat: 1.3g | Sodium: 4.9mg | Potassium: 429mg | Fiber: 4.9g | Iron: 4.4mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

18 மணி நேரங்கள் ago