இன்னைக்கு இருக்க காலகட்டத்தில் எல்லாருமே பெருசா சந்திக்கிற ஒன்னு நா உடல் எடை அதிகமாக இருக்கிறதுதான் உடல் எடையை குறைக்கிறதுக்கு நம்மளும் என்னென்னமோ ட்ரை பண்ணி பார்த்திருப்போம் ஆனால் நம்மளால உடம்பை குறைக்கவே முடியாது. அதுக்காக நம்ம நிறைய டயட் இருப்போம் எக்ஸர்சைஸ் செய்வோம் அந்த டயட்ல நம்ம பெரும்பாலும் எடுத்துக்கிற உணவு என்றால் அது ஓட்ஸ் தான். இந்த ஓட்ஸ்ல நிறைய நார்ச்சத்து இருக்கிறதால அது ஈசி ஆசிரிமானமாக கூடியது அதனால எல்லாருமே காலை உணவாகவோ இல்லை இரவு உணவாகவோ ஓட்ஸ் கஞ்சி எடுத்துப்பாங்க.
இந்த ஓட்ஸை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாலாம் இருக்காது ஆனா செய்த விதத்துல நம்ம செஞ்சு சாப்பிட்டோம் அப்படின்னா அது டயட் உணவாகவே தெரியாது ரொம்ப வெயிட் டேஸ்டான ஒரு உணவா தான் நமக்கு தெரியும். டயட்ல உடல் எடையை குறைக்கணும் நினைக்கிறவங்க மட்டும் இல்லாம எல்லாருமே இந்த ஓட்ஸை சாப்பிடலாம். ஓட்ஸ் எப்பொழுதுமே கஞ்சியா வச்சு சாப்பிடாம கொஞ்சம் வித விதமா ஏதாவது செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில நம்ம நிறைய சூப் குடிச்சிருக்கோம் கீரை சூப் வெஜிடபிள் சூப் அப்படின்னு நிறைய சூப் வகைகள் கொடுத்து இருப்போம் அதே மாதிரி இப்போ ஓட்ஸ்ல நம்ம சூப் செஞ்சு குடிக்க போறோம்.
இந்த ஓட்ஸ் சூப் நம்ம காலை உணவா கூட எடுத்துக்கலாம். டேஸ்ட்டும் உங்களுக்கு ரொம்ப வே சூப்பரா இருக்கும். இதோட டேஸ்ட் எப்படி இருக்கும் அப்படி எல்லாம் நீங்க யோசிக்க வேண்டாம் குழந்தைகளுக்கு கூட இந்த ஓட்ஸ் சூப் நம்ம கொடுக்கலாம் அவங்களும் ரொம்பவே விரும்பி குடிப்பாங்க. இந்த சூப் ல நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கும் அதனால குழந்தைகளுக்கு ஈஸியா செரிமானம் ஆகிடும். இப்ப வாங்க இந்த சத்தான ஓட்ஸ் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஓட்ஸ் சூப் | Oats Soup Recipe in Tamil
Equipment
- 1 அகலமான பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1 கப் ஓட்ஸ்
- 5 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- சிறிய துண்டு பட்டை
- 5 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும்
- பூண்டு நன்றாக வதங்கிய பிறகு ஓட்ஸ் செய்யும் சேர்த்து லேசாக கிளறியதும் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்
- சிறிதளவு மல்லித்தூள் உப்பு அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறவும். சூப் நன்றாக கொதித்ததும் மிளகை பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்
- இறுதியில் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான ஓட்ஸ் சூப் தயார்