ரொம்ப ஈஸியா 10 நிமிஷத்துல ருசியான ஆம்லெட் மசாலா ரைஸ் செய்வது எப்படின்னு பார்க்கலாம்!

- Advertisement -

முட்டை வாங்கினால் அதை வைத்து தான் நாம் இது வரை ஆம்லெட் , குழம்பு செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த முட்டை அதிகமாக  விரும்பி சாப்பிடுவது. காய்கறிகளை தனியாக சமைத்துக் கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி முட்டை களை சாதத்துடன் சேர்த்து கிளறி ஆம்லெட் மசாலா ரைஸ் செய்து கொடுத்து பாருங்கள். இதனை விருப்பமாக சாப்பிட்டு . ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு காய்கறி மட்டும் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஒரு சில குழந்தைகள் சாதத்தை சாப்பிட்டு விட்டு, காய்கறியை அப்படியே மிச்சம் வைத்து விடுவார்கள்.

-விளம்பரம்-

ஆனால் ஒரு சில முட்டைகளை  சேர்த்து ரைஸ் செய்து கொடுத்தால், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் ஆம்லெட் மசாலா ரைஸ். இந்த ஆம்லெட் மசாலா ரைஸ் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் முட்டை வைத்து ஒரு அருமையான கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.

- Advertisement -
Print
No ratings yet

ஆம்லெட் மசாலா ரைஸ் | Omlette Masala Rice In Tamil

ஒரு சில முட்டைகளை  சேர்த்து ரைஸ் செய்து கொடுத்தால், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் ஆம்லெட் மசாலாரைஸ். இந்த ஆம்லெட் மசாலா ரைஸ் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் முட்டை வைத்து ஒரு அருமையான கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Omlette Masala Rice
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 4 முட்டை
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 1/2 பிரியாணி மசாலா
  • 3 தேக்கரண்டி தயிர்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • கொத்தமல்லித் தழை சிறிது
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 2 வரமிளகாய்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு

செய்முறை

  • அரிசியை வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவிடவும். முட்டையுடன் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடித்து ஆம்லெட் போட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்..கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து கரையும் வரை நன்கு வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் பிரியாணி மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதனுடன் ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து முட்டையில் மசாலா சேரும் வரை வேகவிடவும்.
  • பின் சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான ஆம்லெட் மசாலா ரைஸ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg