கோடைகால சீசனில் தர்பூசணி,ஆரஞ்சு வாங்கி சூப்பரான ஆரஞ்சு தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!
கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி
கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.
சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். இந்த தர்பூசணி மாக்டெயில் முற்றிலும் சுவையாக இருக்கும் மற்றும் தாகத்தைத் தணிக்கும். வெயில் காலத்திற்கு ஏற்ற பானம். மாக்டெயில் சமீபத்துல ரொம்பவே பிரபலமாகிக் கொண்டு வருகிறது. இதை குடிக்கிறதுக்கு அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில மக்கள் ஆர்வத்துடன் இந்த மாக்டெயில் குடிக்கிறார்கள். இதை பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். குறிப்பாக வெயில் காலங்களில் இதன் டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். எனவே இதை அதிக விலை கொடுத்து வெளியே குடிக்காமல் வீட்டிலேயே தயாரிக்க எளிமையான தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மலிவான விலையில் கிடைக்கும் தர்பூசணி வைத்து சுவையான அல்வா இப்படி செய்து பாருங்க!