கோடைகால சீசனில் தர்பூசணி,ஆரஞ்சு வாங்கி சூப்பரான ஆரஞ்சு தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

- Advertisement -

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

-விளம்பரம்-

சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். இந்த தர்பூசணி மாக்டெயில் முற்றிலும் சுவையாக இருக்கும் மற்றும் தாகத்தைத் தணிக்கும். வெயில் காலத்திற்கு ஏற்ற பானம். மாக்டெயில் சமீபத்துல ரொம்பவே பிரபலமாகிக்‌ கொண்டு வருகிறது. இதை குடிக்கிறதுக்கு அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில மக்கள் ஆர்வத்துடன் இந்த மாக்டெயில் குடிக்கிறார்கள். இதை பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். குறிப்பாக வெயில் காலங்களில் இதன் டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். எனவே இதை அதிக விலை கொடுத்து வெளியே குடிக்காமல் வீட்டிலேயே தயாரிக்க எளிமையான தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

ஆரஞ்சு தர்பூசணி மாக்டெயில் Orange | Watermelon Mocktail Recipe In Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.
Prep Time10 minutes
Active Time5 minutes
Total Time15 minutes
Course: Drinks
Cuisine: Indian
Keyword: Orange Watermelon Mocktail
Yield: 2 People
Calories: 64kcal

Equipment

 • 1 பவுள்
 • 1 மிக்ஸி
 • 2 கண்ணாடி டம்ளர்

தேவையான பொருட்கள்

 • 3 கப் தர்பூசணி
 • 2 ஆரஞ்சு
 • 2 டேபிள் ஸ்பூன் வெல்லப்பாகு
 • 1 எலுமிச்சை
 • 10 புதினா இலைகள்
 • 1/4 கப் 7up

செய்முறை

 • முதலில் ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி விட்டு அதிலிருந்து சாறு எடுத்து, அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
 • பின் ஒரு மிக்ஸி ஜாரில் தர்பூசணியை விதை நீக்கி, தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
 • பின் புதினா இலைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு கண்ணாடி டம்ளரில் புதினா இலை மற்றும் எலுமிச்சை துண்டு சேர்த்து மத்து வைத்து மசிக்கவும்.
 • பின் ஆரஞ்சு ஜுஸ் மற்றும் 7up சேர்த்து அதனுடன் தர்பூசணி ஜுஸ் சேர்த்து ஒரு எலுமிச்சை துண்டு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான ஆரஞ்சு தர்பூசணி மாக்டெயில் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 64kcal | Carbohydrates: 1.2g | Protein: 9g | Fat: 0.2g | Sodium: 99mg | Potassium: 64mg | Fiber: 0.6g | Sugar: 6.2g | Vitamin A: 28IU | Vitamin C: 14mg | Calcium: 54mg | Iron: 7.3mg

இதனையும் படியுங்கள் : மலிவான விலையில் கிடைக்கும் தர்பூசணி வைத்து சுவையான அல்வா இப்படி செய்து பாருங்க!