வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான். ஜிகர்தண்டாவை வெறுப்பவர்கள் என்று யாரும் இந்த உலகில் இல்லை அதிலும் மதுரையில் தயாரிக்கும் ஜிகர்தண்டா மிகவும் பிரபலமான ஒன்று. அதற்காக இதை குடிப்பதற்கு மதுரைக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
-விளம்பரம்-
மதுரை ஸ்டைலில் ஜில் ஜில் ஜிகர்தண்டா நீங்கள் வீட்டில் வைத்தே எளிமையாக முறையில் செய்து விடலாம். ஆம் இன்று மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
ஜிகர்தண்டா வெயில் காலங்களில் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை ஆகையால் இந்த முறையில் நீங்கள் ஜிகர்தண்டாவே வீட்டிலேயே செய்து குடுபத்துடன் சந்தோஷமாக குடியுங்கள்.
மதுரை ஜிகர்தண்டா | Madurai Jiagarthanda Recipe in Tamil
மதுரையில் தயாரிக்கும் ஜிகர்தண்டா மிகவும் பிரபலமான ஒன்று. அதற்காக இதை குடிப்பதற்கு மதுரைக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மதுரை ஸ்டைலில் ஜில் ஜில் ஜிகர்தண்டா நீங்கள் வீட்டில் வைத்தே எளிமையாக முறையில் செய்து விடலாம். ஆம் இன்று மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம். ஜிகர்தண்டா வெயில் காலங்களில் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை ஆகையால் இந்த முறையில் நீங்கள் ஜிகர்தண்டாவே வீட்டிலேயே செய்து குடுபத்துடன் சந்தோஷமாக குடியுங்கள்.
Yield: 4 Person
Calories: 42kcal
Equipment
- 2 பால் பாத்திரம்
- 2 பவுள்
- 1 பெரிய பவுள்
- 4 கண்ணாடி கிளாஸ்
தேவையான பொருட்கள்
- 4 பாதம் பிசின்
- ¾ கப் சர்க்கரை
- ½ கப் சூடான தண்ணீர்
- 1000 ML பால் Full Cream Milk
- 2 கப் வென்னிலா ஐஸ் கீரிம்
- 2 tbsp நன்னரி சர்பத்
செய்முறை
- முதலில் நீங்கள் ஜிகர்தண்டா செய்ய போகிறீர்கள் என்றால் ஜிகர்தண்டா செய்வதற்கு முந்தைய நாள் இரவிலேயே பாதாம் பிசின் நான்கு துண்டுகளை ஒரு பவுளில் போட்டு இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள்.
- அதன் பிறகு சக்கரை பாகு தயாரிப்பதற்கு அரை கப் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து விடுங்கள். சர்க்கரை நன்கு உருகி வந்ததும் அதில் அரை கப் சூடான தண்ணீர் சேர்த்து இறக்கிக் கொள்ளுங்கள்.
- அதன் பிறகு அரை லிட்டர் பாலை அடுப்பில் வைத்து இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து பால் கிரீம் பதத்திற்கு வரும் வரை கிளறி விட்டு சுண்ட காட்சி எடுத்துக் கொள்ளுங்கள. அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதிலும் அரை லிட்டர் பால் ஊற்றி இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து பாலை கொதிக்க விடுங்கள்.
- பின் பால் நன்றாக கொதித்ததும் இதனுடன் நாம் செய்து வைத்த சர்க்கரை பாகுவில் பாதி அளவு இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின்பு நாம் வாங்கி வைத்திருக்கும் இரண்டு வெண்ணிலா ஐஸ்கிரீமை ஒன்றாக ஒரே பவுளில் சேர்த்து அதில் இரண்டு டீஸ்பூன் சக்கரை பாகு சேர்த்து கலக்கி கொள்ளுங்கள்.
- இப்படி நாம் தயார் செய்தே அனைத்து பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அனைத்து பொருட்களும் நன்றாக குளிர் எறியதும் ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொண்டு முதலில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பாதாம் பிசின் சிறிது அதில் போட்டு அதற்கு மேல் நன்னாரி சர்பத் இரண்டு டீஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
- பின் நம் சுண்ட காய்ச்சி வைத்திருக்கும் பாலை அதன் மேல் சிறிதளவு சேர்த்து அதற்கு மேல் நம் சக்கரை பாகு கலந்த பாலை ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் மேல் சிறிது வெண்ணிலா ஐஸ்கிரீமை எடுத்து பாலில் கலந்து விட்டு கொள்ளவும்.
- ஆதன் பின் இன்னொரு ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீம் எடுத்து பால் மீது கலக்காமல் வைத்து விடுங்கள் அவ்வளவுதான் மதுரை ஸ்டைல் ஜில் ஜில் ஜிகர்தண்டா இனிதே தயாராகி விட்டது.
Nutrition
Serving: 4person | Calories: 42kcal | Carbohydrates: 5g | Protein: 3.4g | Fat: 1.3g | Saturated Fat: 0.6g | Cholesterol: 5mg | Potassium: 150mg