சுவையான பால் பொங்கல் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! ஒரு சட்டி பொங்கலும் காலியாகும்!!

- Advertisement -

பால் பொங்கல் பொங்கல் பண்டிகை அல்லது மகர சங்கராந்தி அன்று இனிப்புப் பொங்கல் அல்லது சக்கரைப் பொங்கலுடன் ஆண்டு முதல் அறுவடை செய்யப்பட்ட அரிசியுடன் செய்யப்படுகிறது. பால் பொங்கல் சூரிய கடவுளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் பாரம்பரியமாக மண் அல்லது பித்தளை பானைகளில் சூரியனை எதிர்கொள்ளும் திறந்தவெளியில் சமைக்கப்படுகிறது.

-விளம்பரம்-

பால் பொங்கல் என்பது வெண்ணெய் போன்ற சுவையான பொங்கல் ஆகும், இது அரிசி மற்றும் பருப்பை பால் மற்றும் தண்ணீரில் சமைத்து தயாரிக்கப்படுகிறது. இது செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இந்த பால் பொங்கலை குக்கரிலேயே செய்யலாம். இந்த பால் பொங்கல் செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது. அதேப் போல் இது அதிக நேரமும் எடுக்காது. இதனை‌ பெரியவர்கள் மட்டும் அல்லாது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
5 from 1 vote

பால் பொங்கல் | Pal Pongal Recipe in Tamil

பால் பொங்கல் பொங்கல் பண்டிகை அல்லது மகர சங்கராந்தி அன்று இனிப்புப் பொங்கல் அல்லது சக்கரைப் பொங்கலுடன் ஆண்டு முதல் அறுவடை செய்யப்பட்ட அரிசியுடன் செய்யப்படுகிறது. பால் பொங்கல் சூரிய கடவுளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் பாரம்பரியமாக மண் அல்லது பித்தளை பானைகளில் சூரியனை எதிர்கொள்ளும் திறந்தவெளியில் சமைக்கப்படுகிறது. பால் பொங்கல் என்பது வெண்ணெய் போன்ற சுவையான பொங்கல் ஆகும், இது அரிசி மற்றும் பருப்பை பால் மற்றும் தண்ணீரில் சமைத்து தயாரிக்கப்படுகிறது. இது செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இந்த பால் பொங்கலை குக்கரிலேயே செய்யலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast
Cuisine: Indian, tamilnadu
Keyword: Pongal
Yield: 5 People
Calories: 122kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மண் பானை

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பச்சரிசி
  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 1 கப் பால்
  • 1 1/2 கப் வெல்லம்
  • 3 ஏலக்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • திராட்சை தேவையான
  • முந்திரி தேவையான
  • 1/2 சிட்டிகை உப்பு

செய்முறை

  • அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து 1கப்புக்கு 6-7 மடங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
  • முதலில் அடுப்பில் பானையை வைத்து தண்ணீர், பால் மற்றும் அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அதே சமயத்தில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து 1/4கப் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  • பால் பொங்கியதும் கழுவி வைத்த அரிசி பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். அது கொதித்ததும், திராட்சை முந்திரி சேர்த்து விடவும்.
  • பின்னர் அரிசியும் பருப்பும் வேகும் வரை அடிக்கடி கிளறவும். வெந்ததும் கரைத்து வைத்த வெல்லக் கரைசலை வடிகட்டி சேர்க்கவும்.
  • பின் இடித்த ஏலக்காய் மற்றும் உப்பு சேர்க்கவும்
  • சர்க்கரை, அரிசி பருப்புடன் கலந்து தண்ணீர் வற்றி வந்ததும் விரும்பினால் நெய் சேர்த்து கலந்து 2நிமிடங்களில் இறக்கி வைக்கவும்.
  • அவ்வளவுதான். மிகவும் சுவையான பால் பொங்கல் ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 122kcal | Carbohydrates: 12g | Protein: 8g | Fat: 4.6g | Potassium: 349mg | Fiber: 0.7g | Vitamin A: 249IU | Calcium: 276mg | Iron: 0.1mg