பாலக்கீரை மற்றும் கார்ன் வைத்து சுவையான புலாவ் மதிய உணவிற்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீரை ரெசிபியை செய்யுங்கள். அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று கடையமல், பொரியல் என்று செய்யாமல் வித்தியாசமாக பாலக்கீரை வைத்து பாலக் க
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீரை ரெசிபியை செய்யுங்கள். அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று கடையமல், பொரியல் என்று செய்யாமல் வித்தியாசமாக பாலக்கீரை வைத்து பாலக் கார்ன் புலாவ் செய்யுங்கள். குறிப்பாக பாலக்கீரையைக் கொண்டு புலாவ் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி கீரையை புலாவ் செய்தால், கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஒரே ஒருமுறை கீரை புலாவ் செய்தால், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இந்த அற்புதமான பாலக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. குறைந்த கலோரி பாலக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம். இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
ஃபோலேட் அதிகம் உள்ள பாலக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த பாலக்கீரையில் சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி.
உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம் அதற்கு இது தான் சரியான ரெசிபி. இப்போது சுவையான பாலக் கார்ன் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!