Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Sweet Corn Pulav
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீரை ரெசிபியை செய்யுங்கள். அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று கடையமல், பொரியல் என்று செய்யாமல் வித்தியாசமாக பாலக்கீரை வைத்து பாலக் க Photo: Recipes
முகப்பு/சைவம்2026.05.15பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பாலக்கீரை மற்றும் கார்ன் வைத்து சுவையான புலாவ் மதிய உணவிற்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீரை ரெசிபியை செய்யுங்கள். அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று கடையமல், பொரியல் என்று செய்யாமல் வித்தியாசமாக பாலக்கீரை வைத்து பாலக் க

PK
எழுதியவர்Prem Kumar15 மே, 2026 அன்று 10:48 AM
2 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
15 நிமிடம்
மொத்தம்
25 நிமிடம்
பேருக்கு
5
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
LUNCH

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீரை ரெசிபியை செய்யுங்கள். அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று கடையமல், பொரியல் என்று செய்யாமல் வித்தியாசமாக பாலக்கீரை வைத்து பாலக் கார்ன் புலாவ் செய்யுங்கள். குறிப்பாக பாலக்கீரையைக் கொண்டு புலாவ் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி கீரையை புலாவ் செய்தால், கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒரே ஒருமுறை கீரை புலாவ் செய்தால், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இந்த அற்புதமான பாலக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. குறைந்த கலோரி பாலக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம். இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

ஃபோலேட் அதிகம் உள்ள பாலக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த பாலக்கீரையில் சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி.

உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம் அதற்கு இது தான் சரியான ரெசிபி. இப்போது சுவையான பாலக் கார்ன் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

5 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின் கார்ன் சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

  4. 4

    அதன்பிறகு பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். பின் குக்கரை திறந்து நெய் மற்றும் முந்திரி சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான பாலக் கார்ன் புலாவ் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 90 கலோரி
  • கொழுப்பு · 3.6g
  • புரதம் · 34g
  • கார்போஹைட்ரேட் · 4.8g
தலைப்புகள்
#பாலக் கீரை சாம்பார்#பாலக் ஆம்லெட்#பாலக் கீரை சட்னி#பாலக் கார்ன் புலாவ்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement