Home சட்னி புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

பாலக் சட்னி கேக்கவே கொஞ்சம் டிஃபரண்டா இருக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுவையும் டிஃபரென்டா இருக்கும். இந்த சுவையான பாலக் சட்னியை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அவ்ளோ அட்டகாசமா இருக்கும். இந்த சட்னி கொஞ்சம் இருந்தா போதும் ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிட்டு முடிச்சிடலாம் அந்த அளவுக்கு கிரேவி மாதிரி இந்த சட்னியை நம்ம செய்ய போறோம்.

-விளம்பரம்-

பாலக் கீரைல பாலக்கீரை கடையல் பாலக் பன்னீர் பாலக் சப்பாத்தி அப்படின்னு செஞ்சிருப்போம். ஆனா இந்த வித்தியாசமான பால சட்னியை கெட்டியான கிரேவி பதத்துக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க இந்த டேஸ்டுக்கு மத்த எல்லா சட்னியும் தோத்துப் போயிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த சட்னியை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சத்தான டேஸ்டான பாலக் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பாலக் சட்னி | Palak Chutney Recipe In Tamil

பாலக் சட்னி கேக்கவே கொஞ்சம் டிஃபரண்டா இருக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுவையும் டிஃபரென்டா இருக்கும். இந்த சுவையான பாலக் சட்னியை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அவ்ளோ அட்டகாசமா இருக்கும். இந்த சட்னி கொஞ்சம் இருந்தா போதும் ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிட்டு முடிச்சிடலாம் அந்த அளவுக்கு கிரேவி மாதிரி இந்த சட்னியை நம்ம செய்ய போறோம். பாலக் கீரைல பாலக்கீரை கடையல் பாலக் பன்னீர் பாலக் சப்பாத்தி அப்படின்னு செஞ்சிருப்போம். ஆனா இந்த வித்தியாசமான பால சட்னியை கெட்டியான கிரேவி பதத்துக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க இந்த டேஸ்டுக்கு மத்த எல்லா சட்னியும் தோத்துப் போயிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Palak Chutney
Yield: 4 People
Calories: 90kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாலக் கீரை
  • 2 பெரிய வெங்காயம்
  • 15 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் பூண்டு புளி உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தாராளமாக என்னை சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வந்ததும் நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து நன்றாக பத்து நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் சுவையான பாலக் சட்னி தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 90kcal | Carbohydrates: 3.14g | Protein: 8.6g | Sodium: 38mg | Potassium: 126mg | Fiber: 5.16g | Vitamin A: 189IU | Vitamin C: 55mg | Calcium: 77mg | Iron: 18.6mg

இதனையும் படியுங்கள் : பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!