சுவையான பன்னீர் பாலக் புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவு வகையான புலாவில் , பட்டாணி புலாவ், மஷ்ரும் புலாவ், சோயா புலாவ், வெஜ் புலாவ் என்று சாப்பிட்டு இருப்பீர்கள். பாலக் சேர்த்து புலாவ் செய்துள்ளீர்களா? பாலக் போன்ற கீரை வகைகளை பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்ப

By Prem Kumar · 25/1/2024

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவு வகையான புலாவில் , பட்டாணி புலாவ், மஷ்ரும் புலாவ், சோயா புலாவ், வெஜ் புலாவ் என்று சாப்பிட்டு இருப்பீர்கள். பாலக் சேர்த்து புலாவ் செய்துள்ளீர்களா? பாலக் போன்ற கீரை வகைகளை பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.

எனவே இந்த மாதிரி, அவர்கள் விரும்பி உண்ணக்கூடிய புலாவ் போன்ற உணவு வகைகளில், பாலக் சேர்த்து செய்தால், சத்தும், சுவையும் ஒரு சேரக் கிடைத்து விடும். பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால், கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும்,இதனை சாப்பிட்டால், பால் அதிகம் சுரக்க உதவுகிறது. கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை வராமல் நம் உடலை பாதுகாக்கலாம்.

பாலக் கீரை மிகவும் சத்தானதாகவும், இரும்புச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால், இந்த ஆரோக்கிய சைவ பிரியாணியை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள், அவர்கள் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ரைதா அல்லது தயிருடன் இந்த உணவு நன்றாக இருக்கும். எனவே, அடுத்த முறை பலாக் கிடைத்தால், அதை என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியும்!

இதனையும் படியுங்கள் : ருசியான தக்காளி புலாவ் இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிப்பார்கள்!

Recipes AMP · Quick view
View full