சுவையான பன்னீர் பாலக் புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவு வகையான புலாவில் , பட்டாணி புலாவ், மஷ்ரும் புலாவ், சோயா புலாவ், வெஜ் புலாவ் என்று சாப்பிட்டு இருப்பீர்கள். பாலக் சேர்த்து புலாவ் செய்துள்ளீர்களா? பாலக் போன்ற கீரை வகைகளை பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.

-விளம்பரம்-

எனவே இந்த மாதிரி, அவர்கள் விரும்பி உண்ணக்கூடிய புலாவ் போன்ற உணவு வகைகளில், பாலக் சேர்த்து செய்தால், சத்தும், சுவையும் ஒரு சேரக் கிடைத்து விடும். பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால், கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும்,இதனை சாப்பிட்டால், பால் அதிகம் சுரக்க உதவுகிறது. கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை வராமல் நம் உடலை பாதுகாக்கலாம்.

- Advertisement -

பாலக் கீரை மிகவும் சத்தானதாகவும், இரும்புச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால், இந்த ஆரோக்கிய சைவ பிரியாணியை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள், அவர்கள் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ரைதா அல்லது தயிருடன் இந்த உணவு நன்றாக இருக்கும். எனவே, அடுத்த முறை பலாக் கிடைத்தால், அதை என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியும்!

Print
5 from 1 vote

பாலக் புலாவ் | Palak Pulao Recipe In Tamil

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவு வகையான புலாவில் , பட்டாணி புலாவ், மஷ்ரும் புலாவ், சோயா புலாவ், வெஜ் புலாவ் என்று சாப்பிட்டு இருப்பீர்கள். பாலக் சேர்த்து புலாவ் செய்துள்ளீர்களா? பாலக் போன்ற கீரை வகைகளை பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே இந்த மாதிரி, அவர்கள் விரும்பி உண்ணக்கூடிய புலாவ் போன்ற உணவு வகைகளில், பாலக் சேர்த்து செய்தால், சத்தும், சுவையும் ஒரு சேரக் கிடைத்து விடும். பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால், கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. பாலக் கீரை மிகவும் சத்தானதாகவும், இரும்புச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால், இந்த ஆரோக்கிய சைவ பிரியாணியை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள், அவர்கள் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Palak Pulao
Yield: 4 People
Calories: 79.01kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 கப் பாலக் கீரை
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 அன்னாசி பூ
  • 5 முந்திரி
  • 1/4 கப் புதினா
  • 3 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு  தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை கழுவி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் பாசுமதி அரிசியை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, அன்னாசி பூ, கிராம்பு, முந்திரி, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் புதினா மற்றும் நறுக்கிய பாலக் கீரை சேர்த்து வதக்கி, ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடிந்து சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக் கீரை புலாவ் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 79.01kcal | Carbohydrates: 3.14g | Protein: 2.39g | Fat: 1.02g | Sodium: 78mg | Potassium: 140mg | Fiber: 2.1g | Vitamin A: 17IU | Vitamin C: 70mg | Calcium: 77mg | Iron: 1.67mg

இதனையும் படியுங்கள் : ருசியான தக்காளி புலாவ் இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிப்பார்கள்!