வீட்டில் ஈஸியாக செய்யகூடிய பாலக் தக்காளி தோசை! கண்டிப்பாக மறக்காமல் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களை வைத்து தான் இந்த தோசையை தயார் செய்யப் போகின்றோம். காலைநேரத்தில் சில  நிமிடத்தில், ஒரு அருமையான பாலக் தக்காளி தோசையை செய்து முடித்து விடலாம். பாலக் கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.

-விளம்பரம்-

பாலக் தக்காளி தோசை, குழந்தைகளுக்கு இதை வெறுமனே கொடுத்தால் கூட, அவர்கள் கையாலேயே எடுத்து, சாப்பிட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு ஒரு ருசியான கலரான பாலக் தக்காளி தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

தோசை மாவு இல்லாத சமயங்களில் பாலக் தக்காளி தோசைக்கு தோசை மாவு அரைப்பது எப்படி? அதுவும் இது போல வித்தியாசமான சுவையுடன் கூடிய தோசை மாவு தயாரித்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் சுலபமாக செய்யக் கூடிய இந்த பாலக் தக்காளி தோசை ரொம்பவே சுலபமாக எப்படி நம் வீட்டில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Print
5 from 2 votes

பாலக் தக்காளி தோசை | Palak Tomato Dosa Recipe In Tamil

காலைநேரத்தில் சில  நிமிடத்தில், ஒரு அருமையான பாலக் தக்காளி தோசையை செய்து முடித்து விடலாம். பாலக் கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்பாலக்தக்காளி தோசை, குழந்தைகளுக்கு இதை வெறுமனே கொடுத்தால் கூட, அவர்கள் கையாலேயே எடுத்து, சாப்பிட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு ஒரு ருசியான கலரான பாலக் தக்காளி தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Paalak Tomato Dosa
Yield: 4
Calories: 49kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 கப் புழுங்கல் அரிசி
  • 2 மேசைக்கரண்டி உளுந்து
  • 1 கப் பாலக் கீரை
  • 3 தக்காளி
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி மிளகு
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு தேவையான அளவு
  • 1 பின்ச் சமையல் சோடா
  • 50 கிராம் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • கருவேப்பிலை/மல்லி இலை சிறிதளவு

செய்முறை

  • அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம்,கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்யாராய் எடுத்து வைக்கவும்,
  • அரிசியுடன் மிளகாய், சிறிது கருவேப்பிலை, சோம்பு, சீரகம், தக்காளி, உப்பு சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் சமையல் சோடா சேர்த்து கலந்து 4 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
  • தோசை சுடுவதற்கு முன் வெங்காயம்,மல்லி/கருவேப்பிலை, பாலக் கீரை ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  • மாவை தோசைக்கல்லில் அடையைப் போல் சற்று தடிமனாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்,
  • சுவையான பாலக் தக்காளி தோசை ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 49kcal | Carbohydrates: 6g | Protein: 4.4g | Fat: 0.9g | Calcium: 395mg