Advertisement
சைவம்

ருசியான பலாக்கொட்டை தேங்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

பலாகொட்டை பொரியல் கேரளாவின் பாரம்பரிய உணவு வகை. இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகிறது. காளான் பொரியல், பன்னீர் பொரியல் போன்ற பல்வேறு சைவ பொரியல்கள் அசைவ கறிக்கு சவால் விடுபவை ஆகும். அந்த வரிசையில் பலாக்கொட்டை பொரியலும் அசைவப் பிரியர்களை சுண்டியிழுக்கும் ருசியையும் மணத்தையும் கொண்டிருக்கும். பலாக்கொட்டையை பயன்படுத்தி பொரியல் வைத்தால் சோறு, தட்டில் மிச்சம் இருக்காது. அவ்வளவு ருசியாக இருக்கும். அதுவும் இந்த கோடை காலத்தில் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். அதனை வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி போடாமல் வெயிலில் காய வைத்து பின் அதனை சமையல் செய்யலாம். சுவைத்தவுடன் நாம் தூக்கி எறியும் பழங்களின் கொட்டை மற்றும் தோல் ஆகியவற்றில் ஏராளமான அத்யாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கம்.

பலாக்கொட்டைகளில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. பழங்களை விட ஒரு மரத்தை உருவாக்கும் கொட்டையில் மரபணு கூறுகள், நோய்‌ எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன் செல்களை அழிவிலிருந்து காக்கும்‌ ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதற்கு இந்த பலாக்கொட்டை பொரியல் ரெசிபி உதவும். தினமும் மதிய உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்ய என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் பீன்ஸ், கேரட், முருங்கை, கோஸ் என்று அதே காய்கறிகளையே செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இந்த பலாக்கொட்டை பொரியல் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவார்கள்.‌

Advertisement

பலாக்கொட்டை தேங்காய் பொரியல் | Palakottai Coconut Poriyal Recipe In Tamil

Print Recipe
பலாகொட்டை பொரியல் கேரளாவின் பாரம்பரிய உணவு வகை. இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகிறது. காளான் பொரியல், பன்னீர் பொரியல் போன்ற பல்வேறு சைவ பொரியல்கள் அசைவ கறிக்கு சவால் விடுபவை ஆகும். அந்த வரிசையில் பலாக்கொட்டை பொரியலும் அசைவப் பிரியர்களை சுண்டியிழுக்கும் ருசியையும் மணத்தையும் கொண்டிருக்கும்.
Advertisement
பலாக்கொட்டையை பயன்படுத்தி பொரியல் வைத்தால் சோறு, தட்டில் மிச்சம் இருக்காது. அவ்வளவு ருசியாக இருக்கும். அதுவும் இந்த கோடை காலத்தில் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். அதனை வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி போடாமல் வெயிலில் காய வைத்து பின் அதனை சமையல் செய்யலாம். இந்த பலாக்கொட்டை பொரியல் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவார்கள்.‌
Course LUNCH
Cuisine Indian
Keyword Palakottai Coconut Poriyal
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 157

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் பலாக்கொட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து பலாக்கொட்டை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் பலாக்கொட்டையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
  • தண்ணீர் சுண்டியதும் துருவிய தேங்காயை சேர்த்து கலந்து பலாக்கொட்டை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான பலாக்கொட்டை தேங்காய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 157kcal | Carbohydrates: 8.3g | Protein: 2.8g | Fat: 1.1g | Sodium: 3.3mg | Potassium: 407mg | Fiber: 2.5g | Vitamin A: 54IU | Calcium: 22mg | Iron: 2.5mg

இதனையும் படியுங்கள் : ருசியான பலாக்கொட்டை சொதி குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

4 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

11 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

22 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

24 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago