- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
பலாகொட்டை பொரியல் கேரளாவின் பாரம்பரிய உணவு வகை. இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகிறது. காளான் பொரியல், பன்னீர் பொரியல் போன்ற பல்வேறு சைவ பொரியல்கள் அசைவ கறிக்கு சவால் விடுபவை ஆகும். அந்த வரிசையில் பலாக்கொட்டை பொரியலும் அசைவப் பிரியர்களை சுண்டியிழுக்கும் ருசியையும் மணத்தையும் கொண்டிருக்கும். பலாக்கொட்டையை பயன்படுத்தி பொரியல் வைத்தால் சோறு, தட்டில் மிச்சம் இருக்காது. அவ்வளவு ருசியாக இருக்கும். அதுவும் இந்த கோடை காலத்தில் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். அதனை வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி போடாமல் வெயிலில் காய வைத்து பின் அதனை சமையல் செய்யலாம். சுவைத்தவுடன் நாம் தூக்கி எறியும் பழங்களின் கொட்டை மற்றும் தோல் ஆகியவற்றில் ஏராளமான அத்யாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கம்.
பலாக்கொட்டைகளில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. பழங்களை விட ஒரு மரத்தை உருவாக்கும் கொட்டையில் மரபணு கூறுகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன் செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதற்கு இந்த பலாக்கொட்டை பொரியல் ரெசிபி உதவும். தினமும் மதிய உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்ய என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் பீன்ஸ், கேரட், முருங்கை, கோஸ் என்று அதே காய்கறிகளையே செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இந்த பலாக்கொட்டை பொரியல் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான பலாக்கொட்டை சொதி குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
Ingredients
Method
முதலில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து பலாக்கொட்டை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் பலாக்கொட்டையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
தண்ணீர் சுண்டியதும் துருவிய தேங்காயை சேர்த்து கலந்து பலாக்கொட்டை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான பலாக்கொட்டை தேங்காய் பொரியல் தயார்.






