ருசியான பன்னீர் பிரைடு ரைஸ் இரவு உணவுக்கு இப்படி செஞ்சி கொடுங்க கொஞ்சம் கூ மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை. சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை. இது இந்தியாவிற்கு வந்ததும் இந்திய மக்களின் சுவைக்கேற்ப பல வேறுபாடுகளை சந்தித்துள்ளது. அவ்வாறான ஒரு மாற்றம் செய்யக் கூடியதே பன்னீ

By Prem Kumar · 25/8/2025

பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை. சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை. இது இந்தியாவிற்கு வந்ததும் இந்திய மக்களின் சுவைக்கேற்ப பல வேறுபாடுகளை சந்தித்துள்ளது. அவ்வாறான ஒரு மாற்றம் செய்யக் கூடியதே பன்னீர் ஃப்ரைட் ரைஸ். இந்தியர்களின் விருப்ப உணவான பன்னீருடன் சேர்த்து ஃப்ரைட் ரைஸ் செய்யப்படுகிறது. பன்னீர் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம். புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம். பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து சுவையான பிரைடு ரைஸ் ரெசிபியை காண உள்ளோம்.

தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்சுக்கு ஒரே மாதிரியான சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என்று வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து போர் அடிக்குதா? அப்போ இப்படி ஒரு ப்ரைடு ரைஸ் ரெசிபியை செய்து கொடுங்க. ப்ரைடு ரைஸ் என்றவுடன் வெஜ் ப்ரைடு ரைஸ், ஏக் ப்ரைடு ரைஸ், சிக்கன் ப்ரைடு ரைஸ் என்று தான் நாம் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் பன்னீர் வைத்து சூப்பரான சுவையில் ப்ரைடு ரைஸ் ரெசிபியை காண உள்ளோம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ப்ரைட் ரைஸினை பன்னீர் பயன்படுத்தி, வித்தியாசமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் பொடிமாஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!

Recipes AMP · Quick view
View full