காரசாரமான ருசியில் பன்னீர் பொடிமாஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!

- Advertisement -

-விளம்பரம்-

பொடிமாஸ் அப்படின்னு சொன்னாலே நமக்கு எல்லாம் ஞாபகம் வருது மூட்டைப்படிமாஸ் தான். சைவப் பிரியர்களுக்காக முட்டைக்கு பதிலா நம்ம இப்போ பன்னீர தான் உபயோகப்படுத்திகிட்டுவறோம். இந்த பன்னீர்ல ரொம்பவே சுவையான பல வகையான உணவுகள் நம்ம செய்து கொண்டிருக்கும். அப்படி பன்னீர்ல செய்யப்படற பல வகை உணவுகள்ள ஒரு உணவாக இப்போ நம்ப பன்னீர் பொடிமாஸ் செய்ய போறோம். இந்த சுவையான பன்னீர் ரொம்ப ஆரோக்கியம் மிக்கதும் கூட அதிக அளவு கால்சியம், புரதச்சத்தும் இருக்கு .

- Advertisement -

இது ஒரு பால் பொருளாக இருப்பதால் கால்சியம் அதிக அளவில் நமக்கு கிடைக்கும். இப்படி பண்ணீர் உணவுகள்ல பலவிதமான உணவுகள் இருந்தாலும் அதாவது பன்னீர் பிரியாணி, பன்னீர் ஃபிரைடு ரைஸ், பன்னீர் புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் 65, பன்னீர் கிரேவி இப்படி பல வெரைட்டிகள் எல்லாம் நம்ம பன்னீரை உணவில் சேர்த்துக் கொண்டாலும் இப்போ நாம செய்ய போறது பன்னீர் பொடிமாஸ். இந்த பன்னீர் பொடிமாஸ் ரொம்பவே ருசியா இருக்கும். முட்டைக்கு பதிலா இந்த பன்னீர் பொடிமாஸ் செய்து கொடுத்தீங்கன்னா முட்டையோட சுவையில அப்படியே இருக்கும்.

ரொம்பவே சுவையான இந்த பன்னீர் பொடிமாஸ் குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். நீங்க இதை சாதத்துக்கு கூட சப்பாத்தி கூட இட்லி தோசை கூட கூட சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு ரொம்பவே சுவையா இருக்கும். இந்த பன்னீர் பொடிமாஸ் வேண்டான்னு சொல்றவங்க யாருமே இருக்க மாட்டாங்க ஏன்னா இதோட சுவை அவ்வளவு நல்லா இருக்கும். ரொம்பவே ஈஸியா செய்திடலாம் ரொம்ப டைம் எடுக்காம சட்டுனு செய்து முடிக்க கூடிய ஒரு பொடிமாஸ் தான் இந்த பன்னீர் பொடிமாஸ். இந்த சுவையான பன்னீர் பொடிமாஸ் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

பன்னீர் பொடிமாஸ் | Paneer Podimas Recipe In Tamil

சுவையான இந்த பன்னீர் பொடிமாஸ் குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். நீங்க இதை சாதத்துக்கு கூட சப்பாத்தி கூட இட்லி தோசை கூட கூட சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு ரொம்பவே சுவையா இருக்கும். இந்த பன்னீர் பொடிமாஸ் வேண்டான்னு சொல்றவங்க யாருமே இருக்க மாட்டாங்க ஏன்னா இதோட சுவை அவ்வளவு நல்லா இருக்கும். ரொம்பவே ஈஸியா செய்திடலாம் ரொம்ப டைம் எடுக்காம சட்டுனு செய்து முடிக்க கூடிய ஒரு பொடிமாஸ் தான் இந்த பன்னீர் பொடிமாஸ். இந்த சுவையான பன்னீர் பொடிமாஸ் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Paneer Podimas
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பன்னீர்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 கரமசாலா
  • 1 துண்டு பட்டை
  • 1 கிராம்பு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்போது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை வரையில் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
  •  பின் அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
     
  • இந்த மசாலாக்கள் நன்றாக சுருள வந்த பிறகு பன்னீரை துருவி இதில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு ஆறிலிருந்து ஏழு நிமிடம் வெந்த பிறகு அதில் கொத்தமல்லி தழைகளை தூவி கலந்து விட்டு இறக்கிப் பரிமாறினால் சுவையான சைவ பன்னீர் பொடிமாஸ் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg