ருசியான பன்னீர் பிரைடு ரைஸ் இரவு உணவுக்கு இப்படி செஞ்சி கொடுங்ம கொஞ்சம் கூ மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

- Advertisement -

பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை. சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை. இது இந்தியாவிற்கு வந்ததும் இந்திய மக்களின் சுவைக்கேற்ப பல வேறுபாடுகளை சந்தித்துள்ளது. அவ்வாறான ஒரு மாற்றம் செய்யக் கூடியதே பன்னீர் ஃப்ரைட் ரைஸ். இந்தியர்களின் விருப்ப உணவான பன்னீருடன் சேர்த்து ஃப்ரைட் ரைஸ் செய்யப்படுகிறது. பன்னீர் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம். புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம். பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து சுவையான பிரைடு ரைஸ் ரெசிபியை காண உள்ளோம்.

-விளம்பரம்-

தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்சுக்கு ஒரே மாதிரியான சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என்று வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து போர் அடிக்குதா? அப்போ இப்படி ஒரு ப்ரைடு ரைஸ் ரெசிபியை செய்து கொடுங்க. ப்ரைடு ரைஸ் என்றவுடன் வெஜ் ப்ரைடு ரைஸ், ஏக் ப்ரைடு ரைஸ், சிக்கன் ப்ரைடு ரைஸ் என்று தான் நாம் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் பன்னீர் வைத்து சூப்பரான சுவையில் ப்ரைடு ரைஸ் ரெசிபியை காண உள்ளோம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ப்ரைட் ரைஸினை பன்னீர் பயன்படுத்தி, வித்தியாசமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -
Print
No ratings yet

பன்னீர் பிரைடு ரைஸ் | Paneer Fried Rice Recipe In Tamil

பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை. சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை. இது இந்தியாவிற்கு வந்ததும் இந்திய மக்களின் சுவைக்கேற்ப பல வேறுபாடுகளை சந்தித்துள்ளது. அவ்வாறான ஒரு மாற்றம் செய்யக் கூடியதே பன்னீர் ஃப்ரைட் ரைஸ். இந்தியர்களின் விருப்ப உணவான பன்னீருடன் சேர்த்து ஃப்ரைட் ரைஸ் செய்யப்படுகிறது. பன்னீர் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம். புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம். பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து சுவையான பிரைடு ரைஸ் ரெசிபியை காண உள்ளோம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Paneer Fried Rice
Yield: 3 People
Calories: 321kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 100 கி பன்னீர்
  • 1 குடைமிளகாய்
  • 1 கேரட்
  • 50 கி பீன்ஸ்
  • 50 கி முட்டைக்கோஸ்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 2 கப் வேகவைத்த சாதம்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்

செய்முறை

  • முதலில் பன்னீரை துண்டுகளாக நறுக்கி மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து சிறிது ‌நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை‌ சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பீன்ஸ், கேரட், குடைமிளகாய், கோஸ், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். இறுதியில் குடமிளகாய் சேர்த்து வதக்கி வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • அதன்பிறகு மிளகு தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கிளறி வறுத்த பன்னீரை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் பிரைடு ரைஸ் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 321kcal | Carbohydrates: 3.6g | Protein: 25g | Fat: 2.2g | Sodium: 18mg | Potassium: 71mg | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 48mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் பொடிமாஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!