Home சைவம் ருசியான பன்னீர் கச்சோரி கலக்கலாக இப்படி வீட்டிலயே சுலபமாக ரெடி பண்ணலாம்!

ருசியான பன்னீர் கச்சோரி கலக்கலாக இப்படி வீட்டிலயே சுலபமாக ரெடி பண்ணலாம்!

பன்னீர் கச்சூரி அப்படின்னா ஒரு சிலருக்கு என்னனே தெரியாம இருக்கலாம் ஒரு சிலர் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஒரு சிலருக்கு அது எப்படி இருக்கும் அப்படின்னு சாப்பிட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கும். அதனால இன்னைக்கு நம்ம பன்னீர் கச்சோரி வீட்டிலேயே எப்படி கடைகள்ல கிடைக்கிற மாதிரி சுவைல செய்யலாம் அப்படின்னு தான் பார்க்க போறோம். மிகவும் ஆரோக்கியமாக பன்னீர் வச்சு செய்யக்கூடிய இந்த கச்சோரிய நம்ம வீட்லையே ரொம்ப எளிமையான முறையில் செஞ்சிடலாம்.

-விளம்பரம்-

வட இந்தியால கிடைக்கக்கூடிய எல்லா உணவுகளுமே கொஞ்சம் கொஞ்சமா தென்னிந்தியாலையும் பேமஸ் ஆகிட்டு வருது. அந்த வகையில இந்த கச்சோரியும் கொஞ்சம் கொஞ்சமா இங்க ஃபேமஸ் ஆயிட்டு இருக்கு. முக்கியமா உத்திரபிரதேசம்ல ரொம்ப பேமஸ் இருக்கக்கூடிய இந்த பன்னீர் கச்சோரிக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க.

இந்த பன்னீர் கச்சேரிக்கு கிரீன் கலர் சட்னி வைத்து சாப்பிட்டோம்னா சுவை ரொம்ப அட்டகாசமா இருக்கும். ஆனா உங்களுக்கு மைதா மாவு பிடிக்கல அப்படின்னா அதுக்கு பதிலா கோதுமை மாவு கூட நீங்க சேர்த்துக்கலாம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்.

இல்ல அப்படின்னா என்னைக்காவது ஒரு நாள் தானே சாப்பிட போறோம் அதனால மைதா மாவிலேயே நீங்க செஞ்சு சாப்பிட்டு ருசிக்கலாம். வட இந்தியாவுல செய்யக்கூடிய உணவு அதனால் ரொம்ப கஷ்டமா இருக்குமோ அப்படி என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். வீட்டிலேயே கடைகள்ல கிடைக்கக்கூடிய அளவுக்கு நம்மளால ரொம்ப டேஸ்டா செய்ய முடியும். இப்ப வாங்க இந்த பன்னீர் கச்சோரிய எப்படி டேஸ்ட்டா செய்யறதுனு பார்க்கலாம்.

Print
No ratings yet

பன்னீர் கச்சோரி | Paneer Kachori Recipe In tamil

வட இந்தியால கிடைக்கக்கூடிய எல்லா உணவுகளுமே கொஞ்சம் கொஞ்சமா தென்னிந்தியாலையும் பேமஸ் ஆகிட்டுவருது. அந்த வகையில இந்த கச்சோரியும் கொஞ்சம் கொஞ்சமா இங்க ஃபேமஸ் ஆயிட்டு இருக்கு.முக்கியமா உத்திரபிரதேசம்ல ரொம்ப பேமஸ் இருக்கக்கூடிய இந்த பன்னீர் கச்சோரிக்கு நிறையஃபேன்ஸ் இருக்காங்க. இந்தியாவுல செய்யக்கூடிய உணவு அதனால் ரொம்ப கஷ்டமா இருக்குமோ அப்படி என்று நீங்கள் யோசிக்க வேண்டாம்.வீட்டிலேயே கடைகள்ல கிடைக்கக்கூடிய அளவுக்கு நம்மளால ரொம்ப டேஸ்டா செய்ய முடியும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Paneer Kachori
Yield: 4
Calories: 321kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு
  • 1 கப் துருவிய பன்னீர்
  • 1/4 கப் சேமியா
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் ஓமம்
  • 2 டீஸ்பூன் வறுத்த எள்
  • 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  • 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேமியா உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்த கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது நறுக்கிய இஞ்சி நறுக்கிய கொத்தமல்லி இலைகள், வறுத்த எள் அனைத்தும் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஓமம் போட்டு தாளித்து அதனையும் பன்னீர் கலவையோடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இப்போது மைதா மாவு கலவையிலிருந்து சிறிய உருண்டைகளாக உருட்டி அதனை கிண்ணம் போல் செய்த பன்னீர் கலவையை கொஞ்சம் எடுத்து வைத்து அதனை மூடி வைக்கவும்.
  • ஒரு கடாயில் என்னை சேர்த்து தயார் செய்து வைத்துள்ள மைதா மாவு உருண்டையை போட்டு நன்றாக வேகும் வரைபொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் கச்சோரி தயார்.

Nutrition

Serving: 3g | Calories: 321kcal | Carbohydrates: 3.9g | Protein: 25g | Sodium: 23mg | Fiber: 1.4g | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 40mg | Iron: 4.1mg