வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ருசியான பன்னீர் மசாலா ரைஸ் ஒரு முறை இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

- Advertisement -

கடையில் வாங்கி சாப்பிடுவது போலவே பன்னீர் மசாலா ரைஸ் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு பன்னீர் ரைஸ் என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால், பக்குவமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரியாது.

-விளம்பரம்-

கடையில் அதிக காசு கொடுத்து வாங்கி பத்தும் பத்தாமல் இந்த வெரைட்டி ரைஸ் சாப்பிடுவார்கள். அப்படியே விருப்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டுவிடுவார்கள். இந்த வெரைட்டி ரைஸ் ரெசிபி  உங்க வீட்ல நாளைக்கு ட்ரை பண்ணி பாருங்க. சண்டே ஸ்பெஷல் பன்னீர் ரைஸ்.வீட்டிலேயே நம் கையாலேயே ஆரோக்கியமாக இந்த ரெசிபியை தயார் செய்தால், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் திருப்தியாக சாப்பிடலாம். அதற்காகத்தான் இந்த பன்னீர் மசாலா ரைஸ் ரெசிபி உங்களுக்காக.

- Advertisement -
Print
5 from 1 vote

பன்னீர் மசாலா ரைஸ் | Paneer Masala Rice Recipe In Tamil

கடையில் அதிக காசு கொடுத்து வாங்கி பத்தும் பத்தாமல் இந்த வெரைட்டி ரைஸ் சாப்பிடுவார்கள். அப்படியே விருப்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டுவிடுவார்கள். இந்த வெரைட்டி ரைஸ் ரெசிபி  உங்கவீட்ல நாளைக்கு ட்ரை பண்ணி பாருங்க. சண்டே ஸ்பெஷல் பன்னீர் ரைஸ்.வீட்டிலேயே நம் கையாலேயே ஆரோக்கியமாக இந்த ரெசிபியை தயார் செய்தால், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் திருப்தியாக சாப்பிடலாம். அதற்காகத்தான் இந்த பன்னீர் மசாலா ரைஸ் ரெசிபி உங்களுக்காக.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Paneer Masala Rice
Yield: 4
Calories: 321kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் வடித்த வெள்ளை சாதம்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 200 கிராம் பன்னீர்
  • 2 சிட்டிகை உப்பு
  • 1/4 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  • இஞ்சி
  • பூண்டு விழுது
  • குடை மிளகாய்
  • மிளகாய்தூள்
  • கரம் மசாலா
  • தனியா தூள்
  • மஞ்சள் தூள்
  • தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை கொஞ்சம்

செய்முறை

  • முதலில் 200 கிராம் வடித்த வெள்ளை சாதம் தேவை. பாசுமதி அரிசி அல்லது சாதாரண அரிசியாக இருந்தாலும் சரி, கொஞ்சமாக உப்பு போட்டு நல்லெண்ணெயை ஊற்றி உதிரி உதிரியாக வேக வைத்து வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள்.
  • அதில்1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். 200 கிராம் அளவு பன்னீரை க்யூப் வடிவத்தில் வெட்டி போட்டு, 2 – சிட்டிகை உப்பு, மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் இந்த பன்னீரை ஃபிரை செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த பன்னீரை தனியாக ஒரு தட்டில் எடுத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அதே கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும்.
  • சீரகம்– 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து முதலில் வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • அடுத்த படியாக பொடியாக நறுக்கிய குடை மிளகாய் – 1 கைப்பிடி, மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், தனியா தூள் – 3/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் போல நன்றாக வதக்கி விட்டு குடைமிளகாயை பாதி அளவு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  (வெடுக்வெடுக்கென கடித்து சாப்பிட்டால்தான் குடைமிளகாயின் ருசி நன்றாக இருக்கும்.) அதன் பின்பு தயிர் – 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, வடித்த சாதத்தை இந்த மசாலாவில் போட வேண்டும்.
  •  இதன் மேலே வறுத்து வைத்திருக்கும் பன்னீரையும் போட்டு, கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி, இதை நன்றாக உதிரி உதிரியாக அப்படியே கலந்துவிட்டால் கமகம வாசத்தோடு சூப்பரான ஒரு பன்னீர ரைஸ் தயாராகியிருக்கும்.
  • உங்கள்வீட்டில் வெங்காயத்தாள் இருந்தால் அதை பொடியை மேலே தூவி பரிமாறுங்கள்.
     

Nutrition

Serving: 200g | Calories: 321kcal | Carbohydrates: 3.9g | Protein: 25g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin C: 25mg | Calcium: 40mg | Iron: 4.1mg