அடுத்தமுறை கோஸ் வாங்கி ருசியான கோஸ் பருப்பு உசிலி கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

கோஸ் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கோஸ் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒருவாட்டி இப்படி கோஸ் பொரியல் செய்து டேஸ்ட் பண்ணிப் பாருங்க. நிச்சயமா திரும்ப திரும்ப இதை செஞ்சுட்டே இருப்பீங்க.

-விளம்பரம்-

முட்டை கோஸ் வாங்கினால் அதை வைத்து கூட்டு பொரியல் போன்ற டிஷ்களை தான் நாம் இது வரை செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த முட்டைகோஸ் அதிகமாக விரும்பி சாப்பிடுவது கிடையாது.. முட்டைகோஸ் உண்பதால் கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்., எலும்புகளுக்கு வலு கொடுக்கும். …

- Advertisement -

கோஸ் பருப்பு உசிலி சமையல் குறிப்பு பதிவில் முட்டை கோஸை வைத்து ஒரு அருமையான பருப்பு உசிலி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

Print
5 from 1 vote

கோஸ் பருப்பு உசிலி | Cabbage Usili Recipe In Tamil

முட்டை கோஸ்வாங்கினால் அதை வைத்து கூட்டு பொரியல் போன்ற டிஷ்களை தான் நாம் இது வரை செய்திருப்போம்.அதுவும் இல்லாமல் இந்த முட்டைகோஸ் அதிகமாக விரும்பி சாப்பிடுவது கிடையாது.. முட்டைகோஸ் உண்பதால்கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்., எலும்புகளுக்கு வலு கொடுக்கும். . கோஸ் பருப்புஉசிலி சமையல் குறிப்பு பதிவில் முட்டை கோஸை வைத்து ஒரு அருமையான பருப்பு உசிலி எப்படிசெய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டைகோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: sidedish
Cuisine: tamilnadu
Keyword: Cabbage Paruppu Usil
Yield: 4
Calories: 153kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • ¼ கிலோ கோஸ்
  • 25 கிராம் துவரம் பருப்பு
  • 25 கிராம் கடலைப் பருப்பு
  • 2 கிராம் மிளகாய் வத்தல்
  • பெருங்காயத்தூள் சிறிது
  • உப்பு சிறிது

தாளிக்க

  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு
  • பெரிய வெங்காயம் சிறிது
  • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

  • கடலைப் பருப்பு,மிளகாய் வத்தல் இரண்டையும் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து காயம் சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த பருப்பை இட்லித் தட்டில் 10 நிமிடம் வைத்து வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோஸ், உப்பு மற்றும் கோஸ் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும் கருகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் பருப்பை போட்டு 1 நிமிடம் கிளறவும்.பின்னர் வேக வைத்துள்ள கோஸை. சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  • கோஸ் பருப்பு உசிலி ரெடி. வத்த குழம்பு , மோர் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
     

Nutrition

Serving: 100g | Calories: 153kcal | Carbohydrates: 22g | Protein: 7g | Fat: 6g | Sodium: 402mg | Fiber: 5g | Sugar: 2g